வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்.. பலியான இரட்டை குழந்தைகள்!

Twins Died By Video Call Treatment | ஹைதராபாத்தில் மருத்துவர் ஒருவர் செவிலியர்களின் உதவியுடன் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்ததால் இரண்டு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்ரனர்.

வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்.. பலியான இரட்டை குழந்தைகள்!

மாதிரி புகைப்படம்

Published: 

06 May 2025 17:59 PM

ஹைதராபாத், மே 06 : ஹைதராபாத்தில் (Hyderabad) மருத்துவர் வீடியோ கால் (Video Call) மூலம் சிகிச்சை பார்த்ததால், இரண்டு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் வீடியோ காலில் அறிவுரை வழங்கிய நிலையில், அதன்படி செவிலியர் சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், செவிலியர் மருத்துவம் பார்த்ததால் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர் – பலியயன பச்சிளம் குழந்தைகள்

ஹைதராபாத்தை சேர்ந்த கீர்த்தி என்ற பெண் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற முடிவு செய்துள்ளார். அதன்படி, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அனுஷ்கா ரெட்டி என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதுமட்டுமன்றி மாதம்  மாதம் அனுஷ்கா ரெட்டியிடம் பரிசோதனைக்கும் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கீர்த்தியின் பிறப்பு உறுப்பு தளர்ந்துள்ளதாகவும், அதற்கு தையல் போட்டு ஓய்வு எடுக்கும்படி மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், ஏப்ரல் 4, 2025 அன்று கீர்த்திக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அப்போது மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், கீர்த்தி சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் அனுஷ்கா ரெட்டி, வீடியோ கால் மூலம் தொடர்ப்புக்கொண்டு பேசி மருத்துவமனையில் இருந்த செவிலியர்களை மருத்துவம் பார்க்க கூறியுள்ளார்.

அதன்படி கீர்த்தியின் கருவறையில் இருந்த குழந்தைகள் அறுவை சிகிச்சையின் மூலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கீர்த்திக்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவமனைக்கு வந்த மருத்துவர், இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துவிட்டதாக கீர்த்தியிடம் கூறியுள்ளார். இது குறித்து ஊடகங்களிடம் பேசிய கீர்த்தி, எனக்கு அடி வயிற்றில் வலி ஏற்பட்டது. அவர்கள் தொலைபேசி மூலம் எனக்கு ஊசி செலுத்த கூறினார்கள். ஆனால் வலி தாங்க முடியாததால் நான் மருத்துவமனைக்கு வந்தேன்.

இந்த நிலையில், மருத்துவர் செவிலியர்களை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு சிகிச்சையை தொடங்கினார். அப்போது எனக்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டது. எனக்கு குழந்தைகள் பிறந்த பிறகே மருத்துவர், மருத்துவமனைக்கு வந்தார் என்று கீர்த்து நடந்த விஷயத்தை விளக்கமாக கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து கீர்த்தியின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.