டார்ச், மெடிக்கல் கிட், பணத்தை ரெடியா வச்சுக்கோங்க – பாதுகாப்பு ஒத்திகை குறித்து அரசு அறிவுறுத்தல்

Safety Essentials for Drills : போர் ஒத்திகை நடைபெறவிருக்கும் நிலையில் மக்கள் டார்ச், பணம், மெடிக்கல் கிட், மெழுகுவர்த்தி ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்குமாறு மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

டார்ச், மெடிக்கல் கிட், பணத்தை ரெடியா வச்சுக்கோங்க – பாதுகாப்பு ஒத்திகை குறித்து அரசு அறிவுறுத்தல்

மாதிரி புகைப்படம்

Updated On: 

06 May 2025 18:15 PM

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் (Pahalgam) பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. பாகிஸ்தானுடன் (Pakistan) நிலவும் போர் பதற்றம் காரணமாக, உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு முக்கிய உத்தரவை அனுப்பியுள்ளது. அதன் படி மே 7, 2025 அன்று நாட்டின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பயிற்சிகளை நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகள் வழியாக பொதுமக்கள் எப்படி தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்  என்பது குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அமைய வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறது.  அப்போது விமானத் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன்கள் அடிக்கப்படும், சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும். அந்த நேரத்தில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் முக்கியமாக இடம்பெறும் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட போர் வந்தால் மக்கள் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கான ஒத்திகை இது.

மக்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்கள்:

  • வீடுகளில் முதற்கட்டமாக அவசர சிகிச்சைக்கான மருத்துவ பெட்டிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

  • டார்ச், மெழுகுவர்த்தி போன்ற அவசர தேவைகளை முன்னோக்கி தயார் வைத்திருக்க வேண்டும்.

  • டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் வேலை செய்யாமல் போகும் சூழ்நிலையை எதிர்பார்த்து, தேவையான அளவு  பணத்தை கையில் வைத்திருக்க வேண்டும்.

பயிற்சியில் கவனம் செலுத்தப்படும் முக்கிய அம்சங்கள்:

  • விமானத்தாக்குதலை எச்சரிக்கும் சைரன் சோதனை

  • பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பயிற்சி

  • மின் வெளிச்சங்களை மறைக்கும் (blackout) நடைமுறைகள்

  • முக்கிய தொழிற்சாலைகள் மக்களின் பாதுகாப்புக்கா தயார் நிலையில் வைத்திருத்தல்

  • ஆபத்து காலங்களில் மக்கள் வெளியேறும் திட்டங்கள் குறித்து பயிற்சி

 

மாவட்ட நிர்வாகங்கள், காவல் துறைகள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும் (NDMA) இணைந்து இந்த பயிற்சிகளை வழிநடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் இந்த பயிற்சிகளை மிகுந்த பொறுப்புடன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்கள் பங்கேற்பும் அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போர் ஒத்திகை நடைபெறும் இடங்கள்

தமிழ் நாட்டை பொறுத்தவரை கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி, மணலி ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேற்சொன்ன பகுதிகளில் போர் சூழலை எதிர்கொள்வது குறித்து மக்களுக்கு போதுமான பயிற்சி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது

இதற்கு முன் இந்த பயிற்சியானது கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் போரின் போது நடைபெற்றிருக்கிறது. அதன் பிறகு 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இதுபோன்ற ஒத்திகை நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவின் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. விரைவில்