நாடு முழுவதும் நாளை போர் ஒத்திகை.. என்னெல்லாம் நடக்கும்? தமிழகத்தில் எங்கு?
Pahalgam Terror Attack : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த சூழலில், நாடு முழுவதும் 2025 மே 7ஆம் தேதியான நாளை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. இதனால், அனைத்து மாநிலங்களில் அதற்கான பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் மணலி, மீனம்பாக்கம், கல்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என கூறப்படுகிறது.

கோப்புப்படம்
டெல்லி, மே 06 : நாடு முழுவதும் 2025 மே 7ஆம் தேதியான நாளை பாதுகாப்பு ஒத்திகை (defence mock drills) நடத்த உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறது. இதனால், அனைத்து மாநிலங்ககளில் அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இருநாடுகளும் ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. மேலும், இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது.
நாடு முழுவதும் நாளை போர் ஒத்திகை
சிந்து நதி நிர் ஒப்பந்தம், விசா ரத்து, வர்க்கம் ரத்து போன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில், பாகிஸ்தானுக்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நீடிக்கிறது. மேலும், எல்லையில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவ தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மேலும், இருநாடுகளும் ராணுவ சோதனை முயற்சியில் ஈடுபட்டது. முதலில் இந்தியா ராணுவ விமானங்களை இறக்கி கங்கா விரைவுச் சாலையில் சோதனை மேற்கொண்ட சில நாட்களிலேயே, பாகிஸ்தான் 450 தூரம் பாய்ந்து தரையில் உள்ள இலக்கை அழிக்கும் அப்தலி ஏவுகணையை சோதனையிட்டு பார்த்தது.
எனவே, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மீது இந்தியா தாக்குதலை எந்நேரமும் தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், டு முழுவதும் 2025 மே 7ஆம் தேதியான நாளை பாதுகாப்பு ஒத்திகை நடத்த உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறது.
என்னெல்லாம் நடக்கும்?
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 244 மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும். இதனால், அனைத்து மாநிலங்களும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. போர் பதற்றம் இருந்தாலும் மாநிலங்கள் என்னென்ன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பது போர் ஒத்திகை நடைபெறும். இந்த போர் ஒத்திகையின் போது என்னெல்லாம் நடக்கும் என்பதை பார்ப்போம்.
இந்த ஒத்திகைக்கு பல்வேறு மாவட்ட அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு வார்டன்கள், தன்னார்வலர்கள், தேசிய கேடட் கார்ப்ஸ், தேசிய சேவைத் திட்டம், கல்லூரி, பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம். வான்வழி தாக்குதல் நடந்தால், முன்கூட்டியே மக்களை எச்சரிக்கை விதமாக, பொது இடங்களில் சைரன் ஒலியை ஒலிபெருக்கிமூலம் ஒலிக்க செய்யும்.
அண்டை நாட்டில் இருந்து தாக்குதல் நடந்தால், தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிவில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்கள், மாணவர்கள் போன்றோருக்குப் பயிற்சி அளிப்பார்கள். மின் நிலையங்கள், தொழில்சாலைகள், தகவல் தொடர்பு மையங்கள் போரின்போது பாதுகாத்தல் போன்ற பயிற்சி அளிக்கப்படும். மேலும், தாக்குதலில் இருந்து தப்பிக்க மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
தமிழகத்தில் எங்கெங்கு பாதுகாப்பு ஒத்திகை?
தமிழகத்தில் போர் ஒத்திகை நிகழ்வு கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி, மணலி ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் போர் ஒத்திகை 51ஆம் ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படுகிறது. கடைசியாக கடந்த 1971ஆம் ஆண்டு ஒத்திகை நடைபெற்றது. இந்திய-பாகிஸ்தான் போருக்கு முன்னதாக, ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.