பயங்கரவாதிகள் மற்றும் இந்தியா ராணுவத்திடையே துப்பாக்கிச்சூடு தாக்குதல்.. எல்லையில் பரபரப்பு!

Gun Fire Attack Between Army and Terrorists | இந்திய ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் இடையே எல்லையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் நிறுத்த ஒப்பதம் அமலுக்கு வந்ததன் காரணமாக, ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பயங்கரவாதிகள் எல்லையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாதிகள் மற்றும் இந்தியா ராணுவத்திடையே துப்பாக்கிச்சூடு தாக்குதல்.. எல்லையில் பரபரப்பு!

சோபியானில் குவிந்துள்ள ராணுவத்தினர்

Updated On: 

13 May 2025 12:23 PM

ஜம்மு & காஷ்மீர் : ஜம்மு & காஷ்மீரின் (Jammu and Kashmir) சோபியான் (Shopian) பகுதியில் இந்தியா ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் மத்தியில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளன. இந்திய ராணுவத்தினர் சுமார் 2 மணி நேரமாக பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்திய அரசு மேற்கொண்டு வந்த நடவடிக்கைகள் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே அமலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தம்

ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் (Pahalgam) பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய நிலையில், 26 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இதன் காரணமாக இந்திய அரசு பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியது. அதன்படி, ஆபரேஷன் சிந்தூரை (Operation Sindoor) கையில் எடுத்த இந்திய அரசு, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து தாக்கியது. இதில் சுமார் 100-க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்தியாவுக்கும் – பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வந்த நிலையில், மே 10, 2025 அன்று இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது.

சோபியான் பகுதியில் ராணுவத்தினர் குவிப்பு

இந்திய ராணுவம் – பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு தாக்குதல்

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்தியுள்ளதால் அமைதி நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்று ( மே 13, 2025) 4 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் காரணமாக தற்போது எல்லையில் இந்திய ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் குல்காமில் முதலில் தாக்குதல் தொடங்கிய நிலையில், தற்போது சோபியான் காட்டு பகுதியில் மோதல் நடைபெற்று வருகிறது.