7G Rainbow Colony 2 : செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தில் இந்த மலையாள நடிகையா?

7G Rainbow Colony 2 : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் செல்வராகவன். இவரின் இயக்கத்தில் தற்போது மிகவும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் படம் 7ஜி ரெயின்போ காலனி 2 . இந்த படமானது உருவாகிவரும் நிலையில், இந்த படத்தில் நடிகை யார் என்பதைப் பற்றிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது

7G Rainbow Colony 2 : செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தில் இந்த மலையாள நடிகையா?

7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படம்

Published: 

17 May 2025 16:13 PM

இயக்குநர் செல்வராகவன் (Selvaraghavan) படங்களை இயக்குவதைத் தொடர்ந்து நடித்தும் வருகிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டிடி நெக்ஸ்ட் லெவல் (DD Next Level) . நடிகர் சந்தானத்தின் (Santhanam) முன்னணி நடிப்பில் வெளியான இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் மட்டும் தற்போது 2 படங்களுக்கும் மேல் உருவாகிவருகிறது. நடிகர் ஜிவி. பிரகாஷ் குமாரின்  (GV Praksh Kumar) நடிப்பில் மெண்டல் மனதில் என்ற படமும், மற்றும் நடிகர் ரவி கிருஷ்ணன் (Ravi Krishna)  இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி 2 (7G Rainbow Colony 2)  போன்ற படங்களும் உருவாகிவருகிறது. இதில் பலரின் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் படம்தான் 7ஜி ரெயின்போ காலனி 2. இந்த படமானது கடந்த, 2004ம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலனி படத்தின், தொடர்ச்சி கதைக்களத்துடன் உருவாகி வருகிறது என்று கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் நடிகர் ரவி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிகை சோனியா அகர்வால் நடித்திருந்தார். மேலும் அவர்தான் பாகம் 2லும் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தில் மலையாள பிரபல நடிகை ஒருவர் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அவர் வேறு யாருமில்லை நடிகை திரிஷாவின் நடிப்பில் வெளியான ராங்கி படத்தில், அவரின் அண்ணன் மகள் கதாபாத்திரத்தில் நடித்த இளம் நடிகை அனஸ்வரா ராஜன்தான் (Anaswara Rajan). இவர்தான் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தில் நடிகர் ரவி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அனஸ்வராவின் இன்ஸ்டாகிராம் பதிவு :

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் மூலமாகத்தான் நடிகை அனஸ்வரா ராஜன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தின் மூலம் அவருக்குத் தமிழ் சினிமாவிலும் பிரபலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர்கள் ரவி கிருஷ்ணா, அனஸ்வரா ராஜன், ஜெயராம், சுமன் ஷெட்டி மற்றும் சுதா போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து இந்த படைத்தன ஷூட்டிங் பலவேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து இந்த 7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படம் இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல் பாகத்திற்கு எவ்வாறு வரவேற்புகள் கிடைத்ததோ அதைப்போல இந்த படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.