ரெட்ரோ படத்தை ரஜினியிடம் காட்ட திட்டமிட்டுள்ள கார்த்திக் சுப்பராஜ்

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் ரெட்ரோ. படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வரும் இந்தப் படத்தை நடிகர் ரஜினிகாந்திடம் திரையிட்டு காட்ட இயக்குநர் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரெட்ரோ படத்தை ரஜினியிடம் காட்ட திட்டமிட்டுள்ள கார்த்திக் சுப்பராஜ்

ரெட்ரோ

Updated On: 

04 May 2025 10:53 AM

நடிகர் சூர்யாவின் (Suriya) 44-வது படமாக உருவாகியுள்ளது ரெட்ரோ படம். இவரது நடிப்பில் முன்னதாக வெளியான படங்கள் வெற்றியைப் பெற தவறியதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு நாயகியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சுவாசிகா, ஜோஜூஜார்ஜ், சிங்கம் புலி, நாசர், ஜெயராம், கருணாகரன் என பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகின்றது. தூத்துக்குடியை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ஒரு காதல் ஆக்‌ஷன் நிறைந்தாக உள்ளது. ஊர் முழுக்க ரவுடியாக சுற்றி வரும் சூர்யா தனது காதலிக்காக அடிதடியை விட்டுவிட்டு வாழ முடிவு செய்கிறார். அதனைத் தொடர்ந்து என்ன நடக்கும் என்பதே படத்தின் கதை.

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ எப்படி இருக்கு?

படத்தின் அறிமுக காட்சியே 1960-களில் நடப்பது போல காட்டப்படுகின்றது. ஜோஜூ ஜார்ஜின் மச்சான் அவர் பதுக்கி வைத்திருக்கும் கடத்தல் பொருட்களை அவருக்கு தெரியாமல் இரவோடு இரவாக கடத்தி விடுகிறார். அப்போது அந்த குடோனில் தனது குழந்தையுடன் காவலுக்கு இருந்த வாட்ச் மேனை கொலை செய்து விடுகிறார்கள். அந்த வாட்ச் மேனின் குழந்தை தான் சூர்யா என்பது போல காட்டப்படுகின்றது.

சம்பவம் தெரிந்து சம்பவ இடத்திற்கு தனது மனைவி சுவாசிகா உடன் வருகிறார் ஜோஜூ ஜார்ஜ். பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருக்கும் சுவாசிகா அங்கு குழந்தை அழுது கொண்டிருப்பதைப் பார்த்து அந்த குழந்தையை எடுத்து வளர்க்க முடிவு செய்கிறார். ஆனால் அந்த குழந்தை வளரும் போதே சிரிக்கவே தெரியாமல் வளர்கிறது. அதற்கு காரணம் அந்த குழந்தையின் கண்முன்னே தந்தை இறப்பதை பார்த்தது தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சூர்யாவிற்கு ஒரு 14 அல்லது 15 வயது இருக்கும் போது சுவாஸிகா உடல் நலக்குறைவால் இறந்து விடுகிறார். ஆரம்பத்தில் இருந்தே சூர்யாவை தனது மகனாக நினைக்காத ஜோஜூ ஜார்ஜ் அவரை தொலைத்துவிட நினைக்கிறார். ஆனால் எதிர்பாராத ஒரு சூழலில் ஜோஜூ ஜார்ஜை கொல்ல வரும் அவரது மச்சனிடம் இருந்து சிறுவன் சூர்யா அவரை காப்பாற்றி விடுகிறார். இதனால் கூடவே சூர்யாவை வைத்து வளர்க்கிறார் ஜோஜூ ஜார்ஜ்.

காதலுக்காம அடிதடியை விட நினைக்கும் சூர்யா:

தனது காதலி பூஜா ஹெக்டேவிற்காக அடிதடியை விட்டுவிட்டு வாழ நினைக்கும் சூர்யா இறுதியாக 4 ஆண்டுகளுக்குப் பிறகு பூஜா ஹெக்டேவை திருமணம் செய்ய நினைக்கிறார். அப்போது அங்கு மகிழ்ச்சியாக வரும் ஜோஜூ ஜார்ஜ் தனது மகன் மருகளுடன் மகிழ்ச்சியாக டான்ஸ் ஆடுகிறார். அதனை தொடர்ந்து சூர்யாவிடம் கோல்ட் ஃபிஷ் என்ற கடத்தல் பொருள் குறித்து கேட்கிறார். ஆனால் சூர்யா அதனை கூற மறுக்கிறார்.

இதனால் இவர்களுக்கு இடையே அடிதடி ஏற்படுகிறது. அதில் ஜோஜூ ஜார்ஜின் கையை சூர்யா துண்டாக வெட்டி விடுகிறார். இதனால் திருமணம் நின்று விடுகிறது. சூர்யாவும் ஜெயிலுக்கு செல்கிறார். அதனைத் தொடர்ந்து இவர்கள் இணைந்தார்களா? சூர்யா அனைத்துப் பிரச்னைகளையும் சரி செய்தாரா என்பதே படத்தின் கதை.

ரஜினிக்கு படத்தை காட்ட திட்டமிடும் கார்த்திக் சுப்பராஜ்:

இந்தப் படம் திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் இது சூர்யாவிற்கு கம்பேக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அளவிற்கு படம் வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில் தற்போது ஜெயிலர் 2 படத்தில் பிசியாக இருக்கும் நடிகர் ரஜினிக்கு ஷூட்டிங் முடிந்ததும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் படத்தை திரையிட்டு காட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.