டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை புகழ்ந்து தள்ளிய பாகுபலி இயக்குநர் – வைரலாகும் போஸ்ட்

Director SS Rajamouli: நடிகர்கள் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாவும் விமர்சன ரீதியாகவும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது டூரிஸ்ட் ஃபேமிலி படம். இந்தப் படத்தைப் பார்த்த பிரலங்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் இயக்குநர் ராஜமௌலியும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை புகழ்ந்து தள்ளிய பாகுபலி இயக்குநர் - வைரலாகும் போஸ்ட்

இயக்குநர் ராஜமௌலி

Published: 

20 May 2025 09:57 AM

மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர்கள் சசிகுமார் மற்றும் சிம்ரன் இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தர். படத்தைப் பார்த்த பிரலங்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று 19-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு அன்று இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்துவிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி கூறியுள்ளதாவது, ஒரு அற்புதமான, அற்புதமான திரைப்படமான டூரிஸ்ட் ஃபேமிலியைப் பார்த்தேன்.
மனதைத் தொடும், மிகவும் மகிழ்ச்சியான ஒரு நகைச்சுவையும் நிறைந்தது அந்தப் படம்.

டூரிஸ்ட் ஃபேமிலி படம்ஆரம்பம் முதல் இறுதி வரை என்னை ஆர்வத்துடன் வைத்திருந்தது. இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அந்தப் படத்திற்கு எழுதிய சிறந்த எழுத்து மற்றும் இயக்கம் என்னை பிரமிக்க வைத்தது. சமீபத்திய ஆண்டுகளில் சிறந்த சினிமா அனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி. டூரிஸ்ட் ஃபேமி படத்தை தவறவிடாதீர்கள்… என்று அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார்.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் எக்ஸ் தள பதிவு:

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இந்த பாராட்டிற்கு நன்றி தெரிவித்து டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, மிக்க நன்றி, எஸ்.எஸ்.ராஜமௌலி சார்! உங்கள் எக்ஸ் தள பதிவு மிகவும் அற்புதமாவும் ஆச்சரியமாக இருந்தது. அந்தப் பதிவு உண்மையிலேயே எங்கள் நாளை இன்னும் சிறப்பானதாக்கியது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத நன்றி என்று தெரிவித்திருந்தார்.

இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் எக்ஸ் தள பதிவு:

இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை மக்கள் மற்றும் பிரபலங்களும் தொடர்ந்து பார்த்துவிட்டு தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் உட்பட பலரும் இந்தப் படத்தைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.