Trisha Krishnan : ‘கமல் சார் நடித்த படத்தில் அந்த படம்தான் பேவரைட்’- த்ரிஷா!

Trisha Krishnans Favorite Kamal Haasan Film : தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ஹிட் படங்களைக் கொடுத்தவர் நடிகை த்ரிஷா கிருஷ்ணன். இவரின் முன்னணி ரிலீசிற்கு காத்திருக்கும் படம், தக் லைஃப். இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடந்துவரும் நிலையில், கமல் படம் குறித்த விஷயத்தை த்ரிஷா பகிர்ந்துகொண்டுள்ளார்

Trisha Krishnan : கமல் சார் நடித்த படத்தில் அந்த படம்தான் பேவரைட்- த்ரிஷா!

நடிகை த்ரிஷா கிருஷ்ணன்

Published: 

23 May 2025 08:15 AM

நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி ஹிட்டான படம் குட் பேட் அக்லி (Good bad Ugly) . இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருந்தார். இந்த ஆண்டில் அஜித்துடன் நடித்த த்ரிஷாவின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்கள் வெளியாகியது. அதில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான குட் பேட் அக்லி ரூ. 250 கோடிகளுக்கு  வசூல் செய்து சாதனை படைத்து. அதைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா கிருஷ்ணனின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் 2025ம் ஆண்டில் 3வது தமிழ்ப் படம்தான் தக் லைஃப் (Thug Life).  இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தின் கதையைக் கமல்ஹாசனும் (Kamal Haasan) , மணிரத்னமும் இணைந்து எழுதியுள்ளனர். இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் சிலம்பரசனும் இணையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகை த்ரிஷா கிருஷ்ணனும், அபிராமியும் லீட் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்த இரண்டு நாயகிகளும் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். நடிகை திரிஷா கிருஷ்ணன் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அந்த ட்ரெய்லரில் நடிகர் கமல் ஹாசனுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

விரைவில் இந்த படமானது வெளியாகவுள்ள நிலையில், ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் தெலுங்கில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா கமல் சார் நடித்ததில் தேவர் மகன் படம்தான் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். அதைக் குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

நடிகை த்ரிஷா கிருஷ்ணனுக்குப் பிடித்த கமல்ஹாசனின் படம் :

தெலுங்கு தக் லைஃப் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன், நடிகர் கமல் சாரின் படங்கள் எல்லாமே பிடிக்கும். அவரின் நடிப்பில் வெளியான தேவர் மகன் படம் மிகவும் பிடிக்கும். அதிலும் நடிகை கவுதமியுடன் நடித்த படங்களும் பிடிக்கும். மேலும் கமல் சாருடன் ஸ்ரீ தேவி மேம் கூட பல படங்களில் நடித்திருக்கிறார். பல முன்னணி பிரபல நடிகைகளுடன் நடித்திருக்கிறார். நடிகர் கமல் சாருடன் ஷூட்டிங்கில் டைம் போறதே தெரியாது, அவர் மிகவும் நகைச்சுவை கொண்ட நபர் என்று நடிகை த்ரிஷா கிருஷ்ணன் கூறியிருந்தார்.

நடிகை த்ரிஷா கிருஷ்ணன் பேசிய அந்த வீடியோ :

கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த தக் லைஃப் படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பிலிருந்து இதுவரை, இப்படத்திலிருந்து 2 பாடங்கள் வெளியாகியுள்ளது.

அதிலும் சமீபத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணனின் நடனத்தில் வெளியான சுகர் பேபி என்ற பாடல் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த பாடலில் நடிகை த்ரிஷா கிருஷ்ணனின் வெள்ளை நிற சாரியில் நடனமாடும் காட்சிகள் இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.