இணையத்தில் கவனம் பெறும் நடிகை ராஷ்மிகாவின் இன்ஸ்டா பதிவு
Actress Rashmika Mandanna: தென்னிந்திய மொழி சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து நடிகை ராஷ்மிகா முன்ன்ணி நடிகயாக வலம் வருகிறார். அவ்வப்போது சமூல வலைதளம் மூலம் ரசிகரக்ளிடையே பேசி வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

நடிகை ராஷ்மிகா மந்தனா
பான் இந்திய நடிகையாக கலக்கி வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் ரசிகர்களிடையே பேசி வருகிறார். அப்படி சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில் அவர் கூறியிருந்ததாவது, ஹேய் மை லவ்ஸ் நான் இங்கு உங்களுக்கு ஹாய் சொல்ல வந்து ரொம்ப நாளாச்சு. மேலும் கொஞ்ச நாட்களாக சில வேலைகள் செஞ்சுட்டு இருக்கேன். அமைதியாகவும், மெதுவாகவும், நிறைய அன்பும் அக்கறையும், கடைசியா அந்த வேலை சரியா நடக்க ஆரம்பிச்சுடுச்சுன்னு நினைக்கிறேன். ஆம்!! மேலும், ஒரு விசயத்தைப் பற்றி பேச வேண்டும். விமானங்கள் ஏன் எப்போதும் தூக்கப் போர்வைகள் மாதிரியும், ஒரு சிக்னேச்சர் ஏர் ஃப்ரெஷனர் மாதிரியும் வாசனை வீசுது??
இல்லன்னா இன்னைக்கு நான் மட்டும்தான் ரொம்ப சோர்வாவும், மூக்கடைப்பாவும் இருக்கேனா? ஹாஹா. உங்க எல்லாரையும் மிஸ் பண்ணிட்டேன். இந்த இடத்தை மிஸ் பண்ணிட்டேன். நீங்க எல்லாரும் உங்கள் நலன் மீது அக்கறை காட்டுவீர்கள் என்று நான் நம்புறேன், சரியா? என்றும் அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.
ஹார்ட்ரிக் வெற்றிக் கொடுத்த நடிகை ராஷ்மிகா மந்தனா:
இந்த 2024-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு வெற்றி முகமாகவே உள்ளது. ஆம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் புஷ்பா 2 படம் திரையரங்குகளில் வெளியானது. நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்த இந்தப் படத்தை இயக்குநர் சுகுமாரன் இயக்கி இருந்தார் படம் ரூபாய் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது.
நடிகை ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டா பதிவு:
அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் சாவா. இந்தியில் உருவான இந்தப் படம் வரலாற்று கதையை அடிப்படையாக கொண்டு வெளியானது. இதில் நடிகர் விக்கி கௌஷல் நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படமும் ரூபாய் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக சிக்கந்தர் படத்தில் நடித்தார். இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். இந்தப் படமும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வரவிருக்கும் படங்கள்:
தொடர்ந்து ஹிட்களை கொடுத்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் குபேரா. நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் நாகர்ஜுனாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு நேரத்தில் உருவாகியுள்ளது.
இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா தமா என்ற ஹரர் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.