தக் லைஃப் படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் குறித்து மணிரத்னம் கொடுத்த அப்டேட்

(Director Maniratnam) இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் தக் லஃப். இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவரது கதாப்பாத்திரம் குறித்து இயக்குநர் மணிரத்னம் சமீபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தக் லைஃப் படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் குறித்து மணிரத்னம் கொடுத்த அப்டேட்

தக் லைஃப்

Published: 

22 May 2025 13:46 PM

தக் லைஃப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படக்குழுவினர் தொடர்ந்து படம் குறித்து பேட்டிகளில் பேசி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் மணிரத்னம் (Director Maniratnam) சமீபத்தில் சினிமா விகடனுக்கு  அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்தப் பேட்டியில் த்ரிஷா கிருஷ்ணனின் கதாப்பாத்திரம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது இந்தப் படம் குறித்து நடிகை த்ரிஷாவிடம் பேசியபோது இதில் வருக் கதாப்பாத்திரம் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த குந்தவை கதாப்பாத்திரத்திற்கு நேர் எதிரான கதாப்பாத்திரம் தான் இந்தப் படத்தில் என்று மணிரத்னம் திரிஷாவிடம் கூறியுள்ளார். அதற்கு த்ரிஷா ஒப்புக்கொண்ட பிறகே இந்தப் படத்தின் பணிகள் தொடங்கியதாகவும் மணிரத்னம் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

குந்தவை டூ சுகர் பேபி:

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் முன்னதாக வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடிகை த்ரிஷா இளவரசி குந்தவையாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரது தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் நடிகை த்ரிஷாவின் நடிப்பும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் மணிரத்னம் தற்போது இயக்கியுள்ள தக் லைஃப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடித்துள்ளார். இது ட்ரெய்லரைப் பார்க்கும் போதே ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது. இதனை உறுதிப் படுத்தும் விதமாக நேற்று த்ரிஷாவின் சுகர் பேபி பாடலையுல் படக்குழு வெளியிட்டிருந்தது.

தக் லைஃப் ட்ரெய்லரால் சர்ச்சையில் சிக்கிய த்ரிஷா:

தக் லைஃப் படம் வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு கடந்த 17-ம் தேதி வெளியிட்டது. இதில் கமல் ஹாசனுடன் நடிகை த்ரிஷா ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள் தன்னை விட 30 வயது அதிகமான ஆண் உடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கிறார் என்று தொடர்ந்து ட்ரோல் செய்யத் தொடங்கினர்.

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இந்த நிலையில் நடிகை த்ரிஷாவின் நடிப்பில் உருவாகியுள்ள சுகர் பேபி என்ற பாடலை நேற்று 21-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு வெளியிட்டு சர்ச்சைகளுக்கு மேலும் தீணி போட்டது படக்குழு. இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.