Silambarasan: அஜித் படத்தின் கிளைமேக்ஸ்.. சிம்பு பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
Actor Silambarasan Talks About Ajiths Film : தமிழ் சினிமாவில் தனது சிறுவயது முதல் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் சிலம்பரசன். இவரின் நடிப்பிலும் நடிகர் கமல் ஹாசனின் நடிப்பிலும் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அப்படம் தக் லைஃப். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், அஜித்தின் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் குறித்து நடிகர் சிலம்பரசன் பேசியுள்ளார். அது என்ன என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

நடிகர் சிலம்பரசன்
நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் கோலிவுட் சினிமாவில் இறுதியாக வெளியான படம் பத்து தல (Padhu Thala). இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டு, இயக்குநர் ஒபேலி என். கிருஷ்ணா இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் சிங்கிள் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து சுமார் 1 வருடத்துக்கும் மேலாக அவர் நடித்து வந்த படம்தான் தக் லைப் (Thug Life) . இந்த படத்தினை இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு, நடிகர் கமல்ஹாசனும் இணைந்து கதை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட இந்த படமானது டபுள் ஹீரோஸ் படமாக இருக்கும். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனின் (Kamal Haasan) கதாபாத்திரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதைப் போல நடிகர் சிலம்பரசனின் கதாபாத்திரத்துக்கும் அவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதாக ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது.
இந்த படம் ரிலீசாகுவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் தக் லைப் படக்குழுவுடன், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சிம்பு , அஜித் , மம்முட்டியின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தைத் திரையரங்கிற்குச் சென்று 4- 5 தடவை பார்க்கவும். அதுவும் அதனைப் படத்தின் க்ளைமேக்ஸ் மியூசிக் மற்றும் காட்சிகள் பற்றிப் பேசியுள்ளார்.
நடிகர் சிலம்பரசன் பேசிய விஷயம் :
அந்தநேர்காணலில் தக் லைப் படக்குழுவுடன் கலந்துகொண்ட சிலம்பரசன். அதில் அவர் “இப்போதுள்ள காலத்தில் படத்தில் ஒரு பிரபலமான காட்சியைப் படம்பிடித்து, அதை தங்களில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பிரபலமாக்கிவிடுகின்றனர். அதை போல அப்போதுள்ள படங்களில் அதுவும், ஏ.ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில், அதுவும் கிளைமேக்ஸ் காட்சியில் நாதஸ்வரம் மியூசிக் ஒன்று இருக்கும்.
அந்த படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் இடம்பெற்றிருக்கும் இசைக்காக அந்த படத்தை நான் 4- 5 தடவை திரையரங்கில் சென்று பார்த்தேன். இப்போது எல்லோரும் அவர்களுக்குப் பிடித்த பாடல்களை யூடியூபில் ஈசியாக பார்த்துவிடுகின்றனர். ஆனால் அந்த படத்தில் க்ளைமேக்சில் அந்த மியூசிக் வரும்போது எனக்கே உடல் புல்லரிக்கும் என்று நடிகர் சிலம்பரசன் ஓபனாக பேசியுள்ளார்.
நடிகர் சிலம்பரசன் பேசிய வீடியோ :
“Today audience are clipping a part of film & posting in social media but we didn’t had that opportunity before🤞. To watch Kandukondain Kandukondain musical climax, I have went for theatres 4-5 times😍♥️. That giving great goosebumps🔥”
– #SilambarasanTRpic.twitter.com/C1LN68qiS8— AmuthaBharathi (@CinemaWithAB) May 22, 2025
நடிகர்கள் கமல் ஹாசன்., சிலம்பரசனின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்னம் இயக்க, ராஜ்கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் என இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் திரையரங்குகளை. வெளியாகவுள்ளது. அதை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.