Vijay Sethupathi : விடுதலை 2 பட ஷூட்டிங் எனக்கு மகிழ்ச்சியாக இல்லை.. நடிகர் விஜய் சேதுபதி ஓபன் டாக்!

Vijay Sethupathi Talks About Vetrimaaran :தமிழ் சினிமாவில் பிரபல நாயகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பிலும், இயக்குநர் ஆறுமுக குமாரின் இயக்கத்திலும் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பட ஏஸ். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, வெற்றிமாறனுடன் விடுதலை பார்ட் 2 படத்தில் பணிபுரிந்ததை பற்றிப் பேசியுள்ளார்.

Vijay Sethupathi : விடுதலை 2 பட ஷூட்டிங் எனக்கு மகிழ்ச்சியாக இல்லை.. நடிகர் விஜய் சேதுபதி ஓபன் டாக்!

விஜய் சேதுபதி மற்றும் வெற்றிமாறன்

Published: 

22 May 2025 17:56 PM

நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) சினிமாவில் ஆரம்பத்தில் துணை கதாபாத்திரம் மற்றும் அங்கீகரிக்கப்படாத ரோல்களில் நடித்து வந்தார். அதைத் தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் படத்தில் இணைந்து நடித்து மிகவும் பிரபலமானார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் விடுதலை பார்ட் 2 (Viduthalai Part 2). இந்த படத்தைப் பிரபல தமிழ் இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கியிருந்தார். இந்த படத்தில் பாகம் 1ல் நடிகர் சூரி (Soori) கதாநாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில் அதைத் தொடர்ந்து விடுதலை பார்ட் 2 படத்தில் விஜய் சேதுபதி லீட் நாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த படமானது திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பைப்பெற்றது . இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியரும் நடித்திருந்தார்.

இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து, வரும் 2025, மே 23ம் தேதியில் வெளியாகும் படம் ஏஸ் (Ace) . இந்த படத்தை இயக்குநர் ஆறுமுக குமார் (Arumuga Kumar)இயக்கியுள்ளார். காமெடி, ஆக்ஷ்ன் மற்றும் கொள்ளை என மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார்.

மேலும் காமெடியனாக நடிகர் யோகிபாபுவும் நடித்துள்ளார். இந்த படமானது ரிலீஸாகவுள்ள நிலையில் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. அதில் ஒரு நேர்காணலில் பேசிய விஜய் சேதுபதி , விடுதலை பார்ட் 2 படத்தில் நடித்துக் குறித்துப் பேசியுள்ளார்.

ஏஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

விடுதலை பார்ட் 2 படத்தில் நடித்துக் குறித்து விஜய் சேதுபதி பேச்சு :

அதில் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறனுடன் படத்தில் வேலைபார்ப்பது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. வெற்றிமாறன் அந்த அளவிற்கு நேர்மையாக, பொறுமையான , திறமையான மனிதர். எனக்கு ஏற்கனவே வெற்றிமாறன் படங்கள் மிகவும் பிடிக்கும், நான் இந்த படத்தில் நடித்ததைத் தொடர்ந்து அவரையும் எனக்கு மிகவும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த படத்தை அவர் உருவாக்கும்போது, நடிகர்களுக்காகவும், தயாரிப்பாளருக்காகவும் சரி எனக்காகவும் சரி அவ்வளவு முடிவையும் மிகவும் திறமையாகக் கையாள்வார்.

எனக்கு இந்த படத்தின் ஷூட்டிங் வ்ராப் என்று கூறிய போது பெரிதாக மகிழ்ச்சி ஒன்றும் எனக்கில்லை, இன்னும் கொஞ்ச நாள் கூட அவருடன் வேலை பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்கும் அதிகம் இருந்தது. மேலும் நானும் அவரிடம் சொல்லிக்கொண்டுதானே இருந்தேன் , சார் எப்போது அடுத்த படத்திற்குக் கூப்பிடுவீர்கள். உங்களுக்காக ஒரு 3 அல்லது 4 மாதங்களில் படத்திற்குத் தயாராகிவிடுவேன் என்று கூறியுள்ளேன் என்று நடிகர் விஜய் சேதுபதி ஓபனாக பேசியுள்ளார்.