Ajay Gnanamuthu : 10 வருடத்தைக் கடந்த ‘டிமாண்டி காலனி 1’ திரைப்படம்.. இன்ஸ்டா மூலம் நன்றி தெரிவித்த இயக்குநர்!

10 Years Of Demonte Colony 1: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் அஜய் ஞானமுத்து. இவரின் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திகில் திரைப்படம் டிமாண்டி காலனி. இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகளைக் கடந்த நிலையில், இயக்குநர் பதிவு ஒன்றைவெளியிட்டுள்ளார்.

Ajay Gnanamuthu : 10 வருடத்தைக் கடந்த டிமாண்டி காலனி 1 திரைப்படம்.. இன்ஸ்டா மூலம் நன்றி தெரிவித்த இயக்குநர்!

டிமாண்டி காலனி

Published: 

22 May 2025 17:01 PM

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் அருள்நிதி (Arulnithi) . இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகியிருந்தாலும், ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்த திரைப்படம் டிமாண்டி காலனி (Demonte Colony). இந்த படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து (Ajay Gnanamuthu) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு மே 22ம் தேதியில் இந்த படமானது திரையரங்குகளில் வெளியானது. இந்த படமானது முற்றிலும் திகில் திரில்லர் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் அருள்நிதி முன்னணி நாயகனாக நடிக்க அவருடன் நடிகர்கள், ரமேஷ் திலக், சனந்த் , அபிஷேக் ஜோசப் ராஜ் மற்றும் சிங்கம் புலி என சில நடிகர்கள் மட்டுமே இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படமானது மிகவும் திரில்லர் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது.

இந்த படத்தில் நண்பர்கள் சிலர் ஒரு தங்க செயினுக்கு ஆசைப் பட்டு, அவர்கள் எவ்வாறு தீயசக்தியிடம் மாட்டிக்கொண்டு உயிரிழக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் முக்கிய கதையாக இருக்கும். இந்த படமானது வெளியாகி இன்று 2025, மே 22ம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவான நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் டிமாண்டி காலனி படம் வெளியாகி 10 வருடத்தைக் கடந்த நிலையில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :

 

அந்த பதிவில் இயக்குநர் அஜய் ஞானமுத்து, “நான் சினிமாவில் ஆரம்பத்தில் முன்னாள் தொழிநுட்ப இளைஞருடன் எனது இயக்குநர் பாதையை ஆரம்பித்தேன். அதைத் தொடர்ந்து நான் இயக்கிய டிமாண்டி காலனி 1 படம் வெளியாகி 10 வருடத்தைக் கடந்தது. எனது முதல் படத்திற்கே நல்ல வரவேற்புகள் கிடைத்த நிலையில், அதை தொடர்ந்து படங்களை இயக்க தொடங்கினேன்” என்று கூறியுள்ளார். மேலும் இதில் நடிகர் அருள்நிதிக்கு, எம்கேவி தமிழரசு, முரளி ராமசாமி எனப் பலருக்கும் நன்றி தெரிவித்தது பதிவை வெளியிட்டுள்ளார்.

டிமாண்டி காலனி 2 :

இவரின் இயக்கத்தில் டிமாண்டி காலனி பாகம் 1ன் தொடர்ச்சி கதைக்களத்துடன் வெளியாகியிருந்த படம் , டிமாண்டி காலனி 2. இந்த படத்திலும் நடிகர் அருள்நிதி முன்னணி நாயகனாக நடித்திருந்தார். அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியில் வெளியானது. முதல் பாகத்தைப் போலவும் இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சுமார் ரூ. 20 கோடி செலவில் உருவான இந்த படம் , சுமார் ரூ.80 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றி பெற்றது. இந்நிலையில் இதன் வெற்றியைத் தொடர்ந்து டிமாண்டி காலனி 3 படமானதும் உருவாகிவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, பிப்ரவரி மாதத்தில் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பாகம் 3ம் இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.