Pushpa 2 : புஷ்பா 2வில் வில்லன் தீம் மியூசிக் இப்படித்தான் உருவானது.. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் விளக்கம்!

Music Director Sam CS : ஒட்டுமொத்த இந்தியாவையும் வசூலில் திரும்பிப் பார்க்கவைத்த திரைப்படம்தான் புஷ்பா 2. நடிகர் அல்லு அர்ஜுனின் முன்னணி நடிப்பில் வெளியான இந்த படமானது, தமிழ் , தெலுங்கு என பல்வேறு மொழிகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சந்தித்த இயக்குநர் சாம் சிஎஸ், வில்லன் பேக்ரவுண்ட் தீம் மியூசிக் உருவானதை பற்றிக் கூறியுள்ளார்.

Pushpa 2 : புஷ்பா 2வில் வில்லன் தீம் மியூசிக் இப்படித்தான் உருவானது.. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் விளக்கம்!

புஷ்பா 2

Published: 

22 May 2025 18:39 PM

டோலிவுட் சினிமாவில் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியாகி, பான் இந்தியா வரை பெறும் வரவேற்பை பெற்ற திரைப்படம் புஷ்பா 2 (Pushpa 2) . இந்த படத்தில் ஐகானிக் நடிகர் அல்லு அர்ஜுன் (Allu Arjun) முன்னணி ஆக்ஷ்ன் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) இணைந்து நடித்திருந்தார். இவர்கள் இருவரின் முன்னணி நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக இந்த படம் கடந்த 2024, டிசம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இந்த பான் இந்தியா படத்தைத் தெலுங்கு இயக்குநர் சுகுமார் (Sukumar) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை, அஜித்தின் குட் பேட் அக்லி படத்தைத் தயாரித்த அதே தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவன ம் தயாரித்திருந்தது. இந்த படமானது ஒட்டுமொத்த வசூலில் சுமார் ரூ. 2000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் (Devi Sri Prasad)  இசையமைத்திருந்தார்.

ஆனால் இவர் படத்தின் பேக்ரவுண்ட் இசையமைக்கவில்லை. படக்குழுவுடன் எழுந்த பிரச்சனையின் காரணமாக அவர், புஷ்பா 2படத்தில் பாடல்களுக்கும் மட்டுமே இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தின் பேக்ரவுண்ட் இசையமைப்பாளராக சாம் சிஎஸ் (Sam CS) மற்றும் தமன் எஸ் போன்ற இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் சாம் சிஎஸ், இந்த படத்தின் வில்லன் தீம் மியூசிக் ஏஐ (Artificial intelligence)  தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கியதாகக் கூறியுள்ளார். இது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் சொன்ன விஷயம் :

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் சாம் சி எஸ், “புஷ்பா 2 படட்டும் உருவாகிவரும்போது ஏஐ தொழில்நுட்பம் வளைந்த நிலையில், அதில் வில்லன் தீம் இசையை நாங்கள் அதை பயன்படுத்தித்தான் உருவாக்கினோம். அதைச் சாதாரணமாக கீபோர்டை பயன்படுத்தி உருவாக்கவில்லை, நாங்கள் எங்களின் குரலை பயன்படுத்து அதை உருவாகியிருந்தோம்.

ஏஐ தொழினுட்பம் ஈஸியாகத்தான் இருக்கும் ஆனால் அதை வைத்து ஒரு உணர்வைக் கொண்டுவர முடியாது, ஆனால் சாதாரணமாக இந்த மாதிரி இசையையே கொண்டு : வரமுடியும் என்று அவர் கூறியுள்ளார். தற்போது இந்த விஷயமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசிய வீடியோ :

நடிகர் அல்லு அர்ஜுனின் இந்த புஷ்பா 2 படமானது ஒட்டுமொத்தமாக அனைத்து மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை ஏற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் , தமிழ்த் திரைப்பட இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில், மிக பிரம்மாண்டமான படத்தில் நடித்தது வருகிறார். இந்த படமானது ஹாலிவுட் பட ரேஞ்சில் உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.