சுமோ டூ வல்லமை… இந்த வாரம் ஓடிடியில் எந்தப் படம் பாப்பீங்க?
Watch To Watch: ஒவ்வொரு வாரமும் கோலிவுட் சினிமாவில் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது போலவே ஓடிடியிலும் படங்கள் வெளியாகி வருகின்றது. தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் அது 4 வாராங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் என்பது வழக்கமாக உள்ளது.

சுமோ, வல்லமை
சுமோ: நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாராகி திரையரங்குகளில் ரிலீஸாகாமல் இருந்த படம் சுமோ. இந்தப் படம் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவாவிற்கு நாயகியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்து இருந்தார். இவர்கள் முன்னதாக இயக்குநர் கிருத்திகா உதயநிதி நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை படத்திலும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் வி.டி.வி.கணேஷ் மற்றும் யோகி பாபு இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது.
அதன்படி படம் நாளை 23-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு டெண்டுகொட்டா ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் ரசிகர்களால் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் மிர்ச்சி சிவாவின் படத்தைப் ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் ஆவளுடன் காத்திருக்கிறார்கள்.
சுமோ படத்தைத் தொடர்ந்து நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் தற்போது பறந்து போ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் ராம் இயக்கியுள்ளார். இந்தப் படம் சர்வதேச அளவில் பட விழாக்களில் திரையிட்டு வருகின்றனர். மேலும் பல விருதுகளையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா உடன் இணைந்து நடிகர்கள் அஞ்சலி மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது.
வல்லமை: நடிகர் பிரேம் ஜி அமரன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது வல்லமை படம். இந்தப் படத்தை இயக்குநர் கருப்பையா முருகன் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் பிரேம் ஜி உடன் இணைந்து நடிகர்கள் திவ்ய தர்ஷினி, தீபா சங்கர், சி.ஆர்.ரஜித் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் கலவையான விமர்சனம் பெற்ற இந்தப் படம் தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றது. அதன்படி படம் நாளை 23-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு ஆஹா ஓடிடியில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் பிரேம் ஜி அமரனும் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபு தனது தம்பி பிரேம் ஜி இல்லாமல் இதுவரை படத்தை வெளியிட்டது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.