Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கணவன் – மனைவி இணைந்து கடன் வாங்கினால் இவ்வளவு சலுகைகள் கிடைக்குமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Husband - Wife Joint Home Loan | கணவன் - மனைவி இணைந்து வீட்டு கடன் பெற்றால் பல சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், கணவன் - மனைவி இணைந்து வீட்டு கடன் பெற்றால் கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கணவன் – மனைவி இணைந்து கடன் வாங்கினால் இவ்வளவு சலுகைகள் கிடைக்குமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 22 Mar 2025 11:38 AM

சொந்தமாக வீடு வாங்க வேண்டும் அல்லது வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருக்கும். என்னதான் சொகுசான குடியிருப்புகளில் வசித்தாலும் தனக்கென சொந்தமாக ஒரு வீடு வைத்திருப்பதை தான் பெரும்பாலான நபர்கள் விரும்புகின்றனர். நடுத்தர குடும்பங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு இந்த சொந்த வீடு என்பதே ஒரு கனவாக உள்ளது. சொந்த வீடு வாங்கவோ, கட்டவோ வேண்டும் என்றால் லட்ச கணக்கில் பணம் செலவாகும் என்பதால் அவர்கள் அந்த முடிவை எடுக்க தயங்குகின்றனர்.

கணவன் – மனைவி இணைந்து கடன் வாங்கினால் கிடைக்கும் பலனக்ள்

சாமானிய மக்கள் வீடு வாங்குவதற்கு பயனளிக்கு வகையில் வங்கிகள் வீட்டு கடன் (Home Loan) வழங்குகின்றன. ஆனால், வீட்டு கடனுக்கு அதிக வட்டி விதிக்கப்படும் என்ற அச்சத்தில் பலரும் அதனை வாங்கி தங்களது கனவுகளை நினைவாக்க தயங்குகின்றனர். ஆனால், கணவன் மனைவி இனி அது குறித்து கவலைப்படாமல் கடன் வாங்கலாம். காரணம், கணவன் மற்றும் மனைவி இணைத்து வங்கியில் கடன் வாங்கும்போது அவர்களுக்கு வட்டி விகிதம் குறைப்பு, வரி சலுகை உள்ளிட்ட பல சிறப்பு பலன்கள் கிடைக்கும்.

கணவன் – மனைவி இணைந்து கடன் வாங்குவதில் இவ்வளவு சிறப்புகளா?

கணவன் – மனைவி இணைந்து வீட்டு கடன் வாங்கினால் என்ன என்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

வரி சலுகை

கணவன் – மனைவி இணைந்து வீட்டு கடன் வாங்கினால், அவர்களுக்கு கடன் கிடைப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. இருவரும் இணைந்து கடன் வாங்கும் பட்சத்தில், அவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.7 லட்சம் வரை வரி சலுகை (Tax Benefits) கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது ரூ.30 லட்சம் வரி விகிதத்தில் உள்ளவர்கள் ஆண்டுக்கு ரூ.2.1 லட்சம் வரை வரியை சேமிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

குறைந்த வட்டி விகிதம்

கணவன் – மனைவி இணைத்து வீட்டு கடன் வாங்கும்போது, இருவரின் வருமானத்தை மதிப்பீடு செய்து அதிக கடன் வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இருவரும் மாத தவணை செலுத்துவதால் நிதி மேலாண்மை எளிதாகும் என கூறப்படுகிறது. கணவன் – மனைவி இணைந்து கடன் வாங்கும்போது, பெண்கள் முதன்மை கடன் பெறுபவராக இருந்தால் சில வங்கிகளில் 0.05 சதவீத முதல் 0.1 சதவீதம் வரை வட்டியை குறைக்கின்றன.

நிதி மேலாண்மை

பிரிவு 80C படி வரி சலுகைகளை பெற கணவன் – மனைவி சொத்தின் இணை உரிமையாளர்களாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, இருவரும் இணைந்து மாதாந்திர தவணை செலுத்த வேண்டும் என்றும்  கூறப்படுகிறது. மேலும் சரியான நேரத்தில் தவணை பணத்தை செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இவற்றின் மூலம் வரி சலுகைகள், வட்டி விகிதம் குறைவது மட்டுமன்றி நிதி மேலாண்மை மேம்படும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

வரி சலுகை, வட்டி விகிதம் குறைப்பு, நிதி மேலாண்மை உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும் நிலையில், கணவன் – மனைவி இணைத்து கடன் பெறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிட் 3 படத்தின் வெற்றி... நானி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!
ஹிட் 3 படத்தின் வெற்றி... நானி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!...
பிளே ஆஃப் கனவுடன் RCB, KKR.. வெற்றி பெற்று ஆப்பு வைக்குமா CSK..?
பிளே ஆஃப் கனவுடன் RCB, KKR.. வெற்றி பெற்று ஆப்பு வைக்குமா CSK..?...
ஒன்று சேரும் 4 கிரகங்கள்.. இந்த 6 ராசிக்கு கிடைக்கும் பலன்கள்!
ஒன்று சேரும் 4 கிரகங்கள்.. இந்த 6 ராசிக்கு கிடைக்கும் பலன்கள்!...
எனக்கு அந்த ரோலில் நடிக்கவேண்டும் என்று ஆசை.. நடிகை ரேவதி!
எனக்கு அந்த ரோலில் நடிக்கவேண்டும் என்று ஆசை.. நடிகை ரேவதி!...
14 வருடங்களுக்கு பிறகு மதுரையில் விஜய்! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
14 வருடங்களுக்கு பிறகு மதுரையில் விஜய்! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு...
கம்பேக் கொடுத்த சூர்யா.. ரெட்ரோ எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
கம்பேக் கொடுத்த சூர்யா.. ரெட்ரோ எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!...
பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவார்...
பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவார்......
இந்த தமிழ் சாங்தான் என்னுடைய பேவரைட்.. ஆச்சர்யம் கொடுத்த கோலி!
இந்த தமிழ் சாங்தான் என்னுடைய பேவரைட்.. ஆச்சர்யம் கொடுத்த கோலி!...
கலக்கல் நாயகி கயாடு லோஹர் பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா?
கலக்கல் நாயகி கயாடு லோஹர் பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா?...
மே மாதத்தில் வெப்ப அலை நாட்கள் இரட்டிப்பாகும் - IMD எச்சரிக்கை!
மே மாதத்தில் வெப்ப அலை நாட்கள் இரட்டிப்பாகும் - IMD எச்சரிக்கை!...
இணையத்தில் வெளியானது சூரியின் மாமன் பட ட்ரெய்லர்!
இணையத்தில் வெளியானது சூரியின் மாமன் பட ட்ரெய்லர்!...