அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. கிராமுக்கு இவ்வளவா? நகை பிரியர்கள் அதிர்ச்சி!
Chennai Gold Rate on 2025 May 6th : கடந்த பத்து நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை பெரிய அளவில் ஏற்றம் இல்லாமல் இருந்த நிலையில், 2025 மே 6ஆம் தேதியான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. குறிப்பாக, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,100 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1000 ரூபாய் வரை உயர்ந்தது நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தங்கம் விலை
சென்னை, மே 06 : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது, தங்கம் விலை சவரனுக்கு (chennai Gold Price) 1,200 ரூபாய் உயர்ந்து ரூ.72,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, கிராமுக்கு 125 ரூபாய் உயர்ந்து, ரூ.9,025க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2025 மே 5ஆம் தேதியான நேற்று, தங்கம் விலை சவருக்கு ரூ.160 உயர்ந்து ரூ.71,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், கிராமுககு ரூ.20 அதிகரித்து 8,775ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், 2025 மே 6ஆம் தேதியான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது, சவரனுக்கே ரூ.1100 உயர்ந்து, ரூ,72,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது நகை பிரியர்கள் இடையே அதிர்ச்சியை கொடுத்தது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
மக்களின் முக்கிய சேமிப்பு ஆபரணங்களாக தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால், தங்கம் வாங்க நினைக்கும் மிடீல் கிளாஸ் மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. அதே நேரத்தில், தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, 2024ஆம் ஆண்டில் இருந்தே தங்கம் உச்சம் தொட்டே வருகிறது. 2024ஆம் ஆண்டீல் ரூ.43,000 ஆக இருந்த தங்கம் விலை, 2025ஆம் ஆண்டில் ரூ.72,000 வரை உயர்ந்திருக்கிறது. கிட்டதட்ட ஒரே ஆண்டில் ரூ.20000க்கு மேல் தங்கம் விலை உயர்ந்தது நகை பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், 2025 மே 6ஆம் தேதியான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் அட்சய திருதியையொட்டி, தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றமில்லை. பெரிதாக உயரவும் இல்லை. அட்சய திருதியை முடிவடைந்த நிலையில், தங்கம் விலை அதிரடியாக உயர்ந்ததுள்ளது. .
கிராமுக்கு இவ்வளவா?
அதன்படி, 2025 மே 6ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,100 உயர்ந்து, ரூ.72,200க்கு விற்பனை செய்யப்படுகிறது கிராமுக்கு 125 ரூபாய் உயர்ந்து, ரூ.9,025க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து கிராமுக்கு ரூ.111க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் பார் வெள்ளியின் விலை 1,11,000 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
. ஒரே நாளில் ரூ,1000-க்கு மேல் தங்கம் விலை உயர்ந்தது நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 10 நாட்களில் தங்கம் பெரிய அளவில் ஏறவில்லை மற்றும் இறங்கவும் இல்லை. 2025ஆம் ஆண்டுக்குள் தங்கம் விலை ரூ.1 லட்சம் வரை நெருக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.