“வெளியே போகாதீங்க” கோவை டூ குமரி.. 10 நாட்களுக்கு மிக கனமழை.. வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்!

Tamil Nadu Weatherman Pradeep John : தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக் கூடும் என பிரதீப் ஜான் கூறியுள்ளார். மேலும், சென்னையில் சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் கணித்துள்ளார்.

வெளியே போகாதீங்க கோவை டூ குமரி.. 10 நாட்களுக்கு மிக கனமழை.. வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்!

பிரதீப் ஜான்

Updated On: 

22 May 2025 10:33 AM

சென்னை, மே 22 :  தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் (weatherman pradeep john) கூறியுள்ளார். மேலும்,  கனமழை பெய்யும் இடங்களுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, அரபிக் கடலில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இந்த நிலையில், அடுத்த 10 நாட்களுககு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இதுகுறித்து வெதர்மேன் பிரதீப் ஜான்  தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவல்

அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, ”தென்மேற்கு பருவமழையின் தொடக்கம். மேற்கு தொடர்ச்சி மலைகளில் மிக கனமழை பெய்யும். எனவே, விடுமுறையை பாதுகாப்பாக திட்டமிடுங்கள். அதி கனமழை பெய்யும் இடங்களுக்கு செல்வதை தவிருங்கள். 2025 மே 23 முதல் ஜூன் 3 வரை 10 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்.

கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், வால்பாறை, நீலகிரி, கூடலூர், கன்னியாகுமரி பகுதிகளுக்கு மிக கனமழை பெய்யும். சில இடங்களில் 24 மணி நேரத்தில் 200 மிமீ வரை மழை பெய்யும். நீலகிரி மாவட்டம், இடுக்கி, குடகு, வயநாடு, கூடலூர்-பனிச்சரிவு பகுதி, வால்பாறை, சிக்மகளூர் மலைகள், கர்நாடக கடலோரப் பகுதிகள், உடுப்பி, ஷிமோகா மலைகள், கேரளா பகுதிகளில் அதி கனமழை பெய்யும்.

கொடைக்கானல், ஏற்காடு, சிறுமலை, கொல்லிமலை, மேகமலை ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளலாம். மேற்கு கடற்கரை/தொடர்ச்சி மலைகளில் பருவமழை தீவிரமடையும். சென்னையில்  சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. தமிழ்நாட்டின் பிற உள் பகுதிகளில் மழை பெய்யும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மிக கனமழை எச்சரிக்கை

வட கர்நாடக கோவை கடலோ பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் 2025 மே 22ஆம் தேதியான இன்று காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடையக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.