Tamil Nadu Weather: அரபிக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி….

India Monsoon Forecast: வட கர்நாடகா-கோவா அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், 2025 மே 25-க்குள் கேரளா, தமிழகத்தில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Weather: அரபிக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி....

தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் வாய்ப்பு

Published: 

22 May 2025 10:25 AM

அரபிக்கடலில் வட கர்நாடகா-கோவா பகுதிக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது (A low pressure area has formed). இது 36 மணி நேரத்தில் தாழ்வுமண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்மேற்கு பருவமழை 2025 மே 25-க்குள் கேரளா மற்றும் தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கலாம். கோவா, கர்நாடகா, குஜராத் பகுதிகளில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைக்கருகே கனமழை பெய்யும் (Heavy rains expected near the Western Ghats) என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் வாய்ப்பு!

வட கர்நாடகா-கோவா அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், 2025 மே 25க்குள் கேரளா, தமிழகத்தில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கலாம். கோவா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கனமழை நீடிக்கும். தமிழக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இடி, மின்னலுடன் மழை தொடரும்.

இந்த வளிமண்டல மாற்றத்தின் காரணமாக தென்மேற்கு பருவமழை, எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே கேரளா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் தொடங்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் கர்நாடகா, கோவா மற்றும் குஜராத் மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைக்கு அண்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

சென்னையில் வெயிலுடன் மழை கலந்த காலநிலை

சென்னையில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் நிலவினாலும், இடைவேளையாக லேசான மழைப் பொழிவும் காணப்பட்டது. கடந்த 2025 மே 16 ஆம் தேதி முதல் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைபெய்து வெப்பம் குறைந்துள்ளது. சில பகுதிகளில் கனமழையும் பெய்துள்ளது.

முன்கூட்டியே பருவமழை தொடங்கும் சாத்தியம்!

தென்மேற்கு பருவமழை 2025 மே 27-ந்தேதி தொடங்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அது 2025 மே 25-ந்தேதிக்குள் தொடங்கக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. கேரளா மாநிலத்தில் இது அடுத்த 4 அல்லது 5 நாட்களில் தொடங்கும் என்றும், தமிழகத்தின் சில பகுதிகளிலும் பரவ வாய்ப்பு உள்ளதையும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வளிமண்டல மாற்றங்கள் தொடரும்

மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா, வடதமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது 2025 மே 23 நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என்றும், அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.