வியக்க வைக்கும் தொல்லியல் விஞ்ஞானம்: வெம்பக்கோட்டையில் நட்சத்திர அணிகலன்
Virudhunagar Excavation:விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற அகழாய்வில் 4000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் சங்கு வளையல்கள், செப்பு நாணயங்கள், மற்றும் 1.9 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர வடிவ அணிகலன்கள் முக்கியமானவை. அமைச்சர் தங்கம் தென்னரசு இதனைப் பாராட்டி உள்ளார்.

வெம்பக்கோட்டையில் நட்சத்திர வடிவ தொல்பொருள் கண்டெடுப்பு
விருதுநகர் மே 13: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை (Vembakottai, Virudhunagar District) அருகே நடைபெற்று வரும் அகழாய்வில் 4,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் (Antiquities) கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் சங்கு வளையல்கள், சில்லு வட்டுகள், செப்பு நாணயங்கள், வேட்டைக்கருவிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. முக்கியமாக, 1.90 மீட்டர் ஆழத்தில் சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர வடிவ அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1.8 மி.மீ சுற்றளவு மற்றும் 3.4 கிராம் எடையுள்ள இந்த அணிகலன்கள், பண்டைய தமிழர் ஆபரண கலையை காட்டுகின்றன. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு (Minister Thangam Thennarasu) பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தமிழர் நாகரிகத்தின் மீதான புதிய பார்வையை ஏற்படுத்தியுள்ளது.
வெம்பக்கோட்டையில் வியக்க வைக்கும் நட்சத்திர அணிகலன் கண்டெடுப்பு
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட தொல்லியல் அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 20 குழிகள் தோண்டப்பட்டுள்ள இந்த அகழ்வில், பண்டைய தமிழர் நாகரிகத்தின் பல்வேறு மறைந்த கோணங்களை வெளிக்கொணரும் வகையில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆபரணங்கள் பெரும் ஆர்வத்தை கிளப்புகிறது.
ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள்
அகழ்வில் சங்கு வளையல்கள், சில்லு வட்டுகள், கல்மணிகள், கண்ணாடி மணிகள், செவ்வந்திகல், சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆபரணங்கள், சதுரங்க ஆட்ட காய்கள், பண்டைய செங்கற்கள், சேரநாட்டு செப்பு நாணயங்கள், வேட்டைக்காக பயன்படுத்தப்பட்ட கருவிகள் என 4,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் பண்டைய தமிழர் வாழ்வியலைப் பிரதிபலிக்கின்றன.
சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள்
சமீபத்தில், 1.90 மீட்டர் ஆழத்தில் சுடுமண்ணால் உருவாக்கப்பட்ட நட்சத்திர வடிவிலான அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 1.8 மி.மீ சுற்றளவும், 0.6 மி.மீ கணமும், 3.4 கிராம் எடையும் கொண்ட இந்த அணிகலன், அதன் இணையாக இன்னொன்றும் அருகில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது பழந்தமிழர் ஆபரண கலையை உறுதி செய்கின்ற முக்கிய கண்டெடுப்பாகக் கருதப்படுகிறது.
அமைச்சரின் பாராட்டு
இக்கண்டெடுப்பைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தகவலில், “ஆச்சர்யங்கள் நிறைந்த தொல்பொருட்களை தன்னுள் கொண்ட வெம்பக்கோட்டை அகழாய்வுத் தளம், இன்னும் பல பழங்கால தமிழர் பொக்கிஷங்களை வெளிக்கொணரும் என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.
வியக்க வைக்கும் வெம்பக்கோட்டை
“வியக்க வைக்கும் வெம்பக்கோட்டை”
ஆச்சர்யங்கள் நிறைந்த பல தொல்பொருள்களை தன்னுள் வைத்திருக்கும் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வுத் தளத்தில் 1.90 மீட்டர் ஆழத்தில், சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 1.8 மி.மீ சுற்றளவும், 0. 6 மி.மீ கணமும், 3. 4… pic.twitter.com/O0ZNpr7q8D
— Thangam Thenarasu (@TThenarasu) May 12, 2025
இந்த வகை அரிய கண்டெடுப்புகள், தமிழர் வரலாற்றின் மறைந்த பக்கங்களை ஒளிர வைக்கும் புதிய வாயிலாக உள்ளன.