கோவில் தேரோட்டத்தில் இருதரப்பு மோதல் – பலர் படுகாயம், வீடுகளுக்கு தீ வைப்பு

Alagudi temple festival clash: ஆலங்குடி அருகே வடகாடு முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தின் போது இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்தனர். குடிசை வீடுகளுக்கு தீ வைத்தல், பொதுமக்களை தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்தன. முன்விரோதம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கோவில் தேரோட்டத்தில் இருதரப்பு மோதல் – பலர் படுகாயம், வீடுகளுக்கு தீ வைப்பு

கோவில் தேரோட்டத்தில் இருதரப்பு மோதல்

Updated On: 

06 May 2025 09:04 AM

புதுக்கோட்டை மே 06: புதுக்கோட்டை மாவட்டம் (Pudukkottai District) ஆலங்குடி அருகே வடகாடு முத்துமாரியம்மன் கோவில் (Vadakadu Muthumariamman Temple) தேரோட்டத்தில் இரு சமூகத்தினர் இடையே மோதல் (Conflict between two communities) ஏற்பட்டது. இதனால் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு தரப்பினர் குடிசை வீடுகளுக்கு தீவைத்து, மற்றொரு தரப்பினர் சாலையில் சென்றவர்களை தாக்கியுள்ளனர். அரசு பஸ்சின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது. இடத்துக்கு வந்த எஸ்.பி. அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாகவே இந்த மோதல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் தேரோட்டத்தில் இருதரப்பு மோதல் – 10 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் நடைபெற்ற முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தின் போது இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயம் அடைந்தனர். வடகாடு பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கோவில் மற்றும் விளையாட்டு திடலை ஒட்டிய புறநிலை பிரச்னைகள் கடந்த சில காலமாகவே இரண்டு சமூகத்தினரிடையே முன்விரோதங்களை உருவாக்கியுள்ளன. இந்த விவகாரங்களை சமாதானப்படுத்த ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தேரோட்ட விழாவின் போது வெடித்த மோதல்

இந்நிலையில், 2025 மே 5ம் தேதி இரவில் நடைபெற்ற கோவில் தேரோட்ட விழாவின் போது, ஏற்கனவே ஏற்பட்ட விரோதம் மீண்டும் வெடித்தது. இதில், ஒரு தரப்பினரான இளைஞர்கள், எதிர் தரப்பினர் வசிக்கும் குடிசை வீடுகளுக்கு தீவைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் மற்றொரு தரப்பினர் பொதுவெளியில் செல்லும் நபர்களை தாக்கியுள்ளனர்.

மோதலில் பலர் படுகாயம், வீடுகளுக்கு தீ வைப்பு

இந்த மோதலில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து, வடகாடு மற்றும் ஆலங்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தாக்குதலின் போது ஒரு அரசு பஸ்ஸின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் பகுதி முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டதாகவும் தகவல்

சம்பவத்திற்கான தகவலை அடிப்படையாகக் கொண்டு, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலில் வீடுகள், இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டதுடன், இருவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகாடு முத்துமாரியம்மன் கோவில்

வடகாடு முத்துமாரியம்மன் கோவில் என்பது தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அமைந்துள்ள ஒரு பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் நடைபெறும் திருவிழா, பக்தர்களின் பெரும் திரளுடன் சிறப்பாக நடைபெறுகிறது.

2025 ஆம் ஆண்டின் திருவிழா மே மாதத்தில் நடைபெற்றது. இதில் தேரோட்டம், மஞ்சள் விளையாட்டு உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. அம்மனின் அருளைப் பெறும் நம்பிக்கையில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.