Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

களைகட்டும் மதுரை சித்திரைத் திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்

Madurai Chithirai Festival: மதுரை சித்திரைத் திருவிழா 2025, ஏப்ரல் 29 முதல் மே 14 வரை நடைபெற உள்ளது; முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி 2025 மே 12ம் தேதி நடக்கிறது. அமைச்சர் குழு ஆய்வு செய்து, பாதுகாப்பு, உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் திட்டமிட்டுள்ளனர். கோரிப்பாளையம் பகுதியில் மேம்பால பணிகள் மே 10க்குள் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

களைகட்டும் மதுரை சித்திரைத் திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்
களைகட்டும் மதுரை சித்திரைத் திருவிழாImage Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 21 Apr 2025 10:07 AM

மதுரை ஏப்ரல் 21: மதுரை சித்திரைத் திருவிழா (Madurai Chithirai Festival) 2025 ஏப்ரல் 29ல் தொடங்கி 2025 மே 14 வரை நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது 2025 மே 12 அன்று நடைபெறும். அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளை கண்காணித்துள்ளனர். பக்தர்களுக்கான உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளது. கோரிப்பாளையம் பகுதியில் மேம்பால பணிகள் மே 10க்குள் அகற்ற உத்தரவு தரப்பட்டுள்ளது. விழா சிறப்பாக நடைபெறும் முழுமையாக செயலில் இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சித்திரைத் திருவிழா தொடக்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

மதுரை சித்திரைத் திருவிழா 2025 ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 2025 மே 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி 2025மே 12ம் தேதி நடைபெறும். இந்த விழாவுக்காக, பல லட்சம் பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர்கள் ஆய்வு மற்றும் ஏற்பாடுகள்

இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகளை மதுரை மாவட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு, சேகர்பாபு, மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அவர்கள், தமுக்கம் மைதானம் முதல் கோரிப்பாளையம் வரை நடந்தே சென்று, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடம் மற்றும் மேம்பால பணிகள் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

சித்திரை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்

சித்திரை திருவிழாவில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும் என தமிழக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களுக்கு எதிராக, போலீசார் சீரான நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார்.

பக்தர்களுக்கான வசதிகள்

விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தரமான உணவு, குடிநீர், தற்காலிக கழிப்பறைகள், சுகாதார வசதிகள் ஆகியவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. உணவு வழங்கும் இடங்கள் அனைத்தும் அரசு அனுமதியுடன் செயல்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சுத்தமில்லாத உணவு வழங்கும் ஹோட்டல்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கோரிப்பாளையம் பகுதியில் மேம்பால பணிகள்

கோரிப்பாளையத்தில் நடக்கும் மேம்பால கட்டுமானம், பக்தர்கள் திரளும் பகுதியில் இடையூறு ஏற்படுத்தக்கூடும் என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து 2025 மே 10-க்குள் கட்டுமானப் பொருட்களை அகற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக ஆற்றில் தண்ணீர் திறப்பது போன்ற செயல்களும் திட்டமிடப்பட்டுள்ளது.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

தங்கக் குதிரையில் வருகை தரும் கள்ளழகர் வைகையில் இறங்கும் இடமான கோரிப்பாளையம் பகுதியில், பாதுகாப்பு காரணமாக திரைச்சுவர் அமைத்து, பக்தர்கள் மேம்பாலத்தில் ஏறுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சட்டப்பேரவையில் விழா குறித்து விவாதம்

மதுரை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் செல்லூர் ராஜு, சித்திரை விழாவின் போது விஐபிகளுக்கான தனிப்பாதை காரணமாக ஏற்பட்ட நெரிசலால் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக கூறியுள்ளார். இதனால், விஐபி பாதைகள் தவிர்க்கப்பட்டு, பொதுமக்களுக்கு உகந்த பாதைகள் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கள ஆய்வில் அமைச்சர் சேகர்பாபு பேச்சு

அமைச்சர் சேகர்பாபு, விழா சிறப்பாக நடைபெற அரசு முழுமையாக செயலில் இருக்கிறது எனவும், சுத்தம், பாதுகாப்பு, போக்குவரத்து, குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்றவை முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளன என்றும் கூறினார். மேலும், மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா இந்த ஆண்டின் இறுதிக்குள் நடத்தப்படும் என அறிவித்தார்.

விரிவான ஏற்பாடுகள் மூலம், மதுரை சித்திரைத் திருவிழா 2025 மிக சிறப்பாக நடத்தப்பட இருக்கிறது. பக்தர்கள் பாதுகாப்புடன், ஆனந்தமாக திருவிழாவில் பங்கேற்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளி பயணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
மாற்றுத்திறனாளி பயணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?...
கோடையில் சிறப்பு வகுப்புகள்.. தனியார் பள்ளிகளுக்கு வார்னிங்!
கோடையில் சிறப்பு வகுப்புகள்.. தனியார் பள்ளிகளுக்கு வார்னிங்!...
GTvSRH: 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி
GTvSRH: 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி...
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?...
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!...
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?...
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்...
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?...
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!...
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!...
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!...