சாத்தான்குளத்தில் பயங்கரம்.. காவலர் தாய் கொடூர கொலை.. சிக்கிய இளம்பெண்.. நடந்தது என்ன?
Sathankulam Murder : சாத்தான்குளத்தில் காவலர் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவலரின் தாயை கொலை செய்து அவரிடம் இருந்து 8 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது. காவலரின் தாயை கொலை செய்ததாக இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சாத்தான்குளத்தில் காவலர் தாய் கொலை
தூத்துக்குடி, ஏப்ரல் 15: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவலரின் தாய் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவலரின் தாய் அணிந்திருந்த தங்க நகைகளும் திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இளம்பெண்ணை கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விக்ராந்த். இவர் சாத்தான்குளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
சாத்தான்குளத்தில் பயங்கரம்
இவர் தனது தாயுடன் வசித்து வந்தார். இவர் தினமும் பணிக்கு சென்றபிறகு, தாய் வசந்தா (65) வீட்டில் தனியாக இருந்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று, விக்ராந்த் வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தாய் வசந்தா ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.
இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த விக்ராந்த், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சாத்தான்குளம் போலீசார், வசந்தாவின் உடலை மீட்டு விசாரணை தீவிரப்படுத்தினர். அப்போது, வசந்தா அணிந்திருந்த நகைகள் காணாமல் போனது தெரிந்தது.
இதனை அடுத்து, வசந்தா கொலை செய்யப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் கொலையாளியை தீவிரமாக தேடினர். அங்கிருக்கு சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
காவலர் தாய் கொடூர கொலை
அப்போது, இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் அவரை தேடி நிலையில், 2025 ஏப்ரல் 15ஆம் தேதி (இன்று) காலை கைது செய்யப்பட்டார். அவர் 22 வயதான செல்வரதியை என்று தெரியவந்தது. இவர் காவலர் விக்ராந்தின் தாய் வசந்தாவை கொலை செய்து, அவரிடம் இருந்து 8 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சமீக காலமாகவே தமிழகத்தில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் நடக்கும் கொலை சம்பவங்கள் மாநிலத்தையே உலுக்கி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக குற்றச்சாட்டு வருகின்றனர்.
அண்மையில் கூட நெல்லையில், ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்டது மாநிலத்தையே உறையவைத்தது. இவரை கொலை செய்த முகமது தௌபிக்கை போலீசார் கைது செய்தனர். ரெட்டியார்பட்டியில் பதுங்கி இருந்த முகமது தௌபிக்கை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த சூழலில், தென் மாவட்டத்தில் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடியில் காவலரின் தாய் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.