Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipes: வாழைக்காய் பொடிமாஸ் கூட்டு! 5 நிமிடத்தில் அசத்தலாக செய்வது எப்படி..?

Vazhakkai Podimas Recipe: வாழைக்காயில் இயற்கை சர்க்கரை குறைவாகவும், எதிர்ப்பு திறன் கொண்ட மாவுச்சத்தும் உள்ளது. இது நீரிழிவு மற்றும் எரிச்சல் கொண்ட குடல் பிரச்சனைகளுக்கு நன்மை பயக்கும். இது நார்ச்சத்து நிறைந்தது. இதனால், இதய ஆரோக்கியம் மேம்படும். அந்தவகையில், இன்று வாழைக்காயை கொண்டு வாழைக்காய் பொடிமாஸ் எப்படி செய்வது என்று தெரிந்துகொள்வோம்.

Food Recipes: வாழைக்காய் பொடிமாஸ் கூட்டு! 5 நிமிடத்தில் அசத்தலாக செய்வது எப்படி..?
வாழைக்காய் பொடிமாஸ் Image Source: Freepik
mukesh-kannan
Mukesh Kannan | Published: 02 Apr 2025 16:46 PM

வாழைப்பழம் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் ஊட்டச்சத்துக்களுக்கு பிரபலமானது. இதில் வைட்டமின் பி6, வைட்டமின் சி (Vitamin C), பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது நமது செரிமானத்திற்கும் இரத்த ஆரோக்கியத்திற்கும் நன்மையை தரும். மேலும், இந்த பழம் மலச்சிக்கல், வயிற்று புண் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். இது கர்ப்பிணிகளுக்கு மிகவும் நன்மை தரும். அதேபோல், இது வயிற்றுக்குள் இருக்கும் கருவின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. வாழைக்காயில் இயற்கை சர்க்கரை குறைவாகவும், எதிர்ப்பு திறன் கொண்ட மாவுச்சத்தும் உள்ளது. இது நீரிழிவு மற்றும் எரிச்சல் கொண்ட குடல் பிரச்சனைகளுக்கு நன்மை பயக்கும். இது நார்ச்சத்து நிறைந்தது. இதனால், இதய ஆரோக்கியம் மேம்படும். அந்தவகையில், இன்று வாழைக்காயை (Raw Banana) கொண்டு வாழைக்காய் பொடிமாஸ் எப்படி செய்வது என்று தெரிந்துகொள்வோம்.

வாழைக்காய் பொடிமாஸ்:

தேவையான பொருட்கள்

  •  பச்சை வாழைக்காய் – 1
  • பச்சை மிளகாய் – 2
  • உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
  • கடுகு – 1/4 டீஸ்பூன்
  • எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • பெருங்காயம் – சிறிதளவு
  • சின்ன வெங்காயம் – 8
  • தேங்காய் துருவல் – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

வாழைக்காய் பொடிமாஸ் கூட்டு செய்வது எப்படி..?

  1. கடைகளில் வாங்கி வந்த பச்சை வாழைக்காயை நன்றாக கழுவி 2 ஆக வெட்டி எடுத்து கொள்ளவும்
  2. அதன்பிறகு, ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீரில் ஊற்றி வெட்டி வைத்த வாழைக்காயை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
  3. வாழைக்காய் நன்றாக வெந்ததும் அதனை சாதாரண தண்ணீர் ஊற்றி ஆறியதும் வெளியே எடுத்து தோலை உரித்து கொள்ளவும்.
  4. இப்போது தோல் உரித்து எடுத்து வைத்துள்ள வேகவைத்த வாழைக்காயை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
  5. 3 முதல் 4 ஆக அரைத்த வாழைக்காயுடன் சிறிதளவு உப்பு மற்றும் தேவையான அளவு தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
  6. இப்போது கேஸ் அடுப்பை ஆன் செய்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காயும் வரை காத்திருக்கவும்.
  7. காய்ந்ததும் எண்ணெயில் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு, பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
  8.  இவை எல்லாம் நன்றாக பொரிந்ததும் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து தாளிக்கவும்.
  9. அதனுடன் சிறிது பெருங்காயத்தூளையும் சேர்த்து நன்றாக கிளறவும்.
  10. அடுத்ததாக தேவையான அளவு உப்பு சேர்த்து வதங்கிய பின், அரைத்து வைத்துள்ள வாழைக்காய் கலவையை சேர்க்கவும்.
  11. இவை அனைத்தையும் நன்றாக 2-3 நிமிடங்கள் கிளறினால்போதும் சுவையான வாழைக்காய் பொடிமாஸ் கூட்டு ரெடி.
  12. இதை சூடான சாப்பாடு மற்றும் குழம்பு வகைகளுடன் சாப்பிட அமிர்தமாக இருக்கும்.
பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி... அமித் ஷா உறுதி!
பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி... அமித் ஷா உறுதி!...
இந்திய சினிமாவைத் தவிற வேறு எந்த சினிமாவாலும் அதை செய்ய முடியாது
இந்திய சினிமாவைத் தவிற வேறு எந்த சினிமாவாலும் அதை செய்ய முடியாது...
திருப்பூரில் பயங்கரம்... நடுரோட்டில் செவிலியர் அடித்து கொலை!
திருப்பூரில் பயங்கரம்... நடுரோட்டில் செவிலியர் அடித்து கொலை!...
UTS செயலி யூஸ் பண்ணறீங்களா..? தெற்கு ரயில்வே எச்சரிக்கை
UTS செயலி யூஸ் பண்ணறீங்களா..? தெற்கு ரயில்வே எச்சரிக்கை...
தொடங்கப்போகும் கத்திரி வெயில்.. வெப்பநிலை உயரும்!
தொடங்கப்போகும் கத்திரி வெயில்.. வெப்பநிலை உயரும்!...
ஜெய்ப்பூரில் வீழ்த்த ராஜஸ்தான்.. மும்பை அதிரடி வெற்றி!
ஜெய்ப்பூரில் வீழ்த்த ராஜஸ்தான்.. மும்பை அதிரடி வெற்றி!...
தர்பூசணியுடன் சாப்பிடக்கூடாத 4 உணவுகள் - எச்சரிக்கும் நிபுணர்கள்!
தர்பூசணியுடன் சாப்பிடக்கூடாத 4 உணவுகள் - எச்சரிக்கும் நிபுணர்கள்!...
இதய நோய்களை சில விநாடிகளில் கண்டுபிடிக்கும் ஏஐ!
இதய நோய்களை சில விநாடிகளில் கண்டுபிடிக்கும் ஏஐ!...
வெயிலால் ஏற்படும் தோல் எரிச்சல்... டாக்டர் சொல்லும் அறிவுரை!
வெயிலால் ஏற்படும் தோல் எரிச்சல்... டாக்டர் சொல்லும் அறிவுரை!...
கோடையில் நீங்கள் சிக்கன் சாப்பிடுகிறீர்களா? பிரச்சனை உண்டாகும்!
கோடையில் நீங்கள் சிக்கன் சாப்பிடுகிறீர்களா? பிரச்சனை உண்டாகும்!...
குங்ஃபூவை பயன்படுத்தி திருடனை வீழ்த்திய இளைஞர் - வைரல் வீடியோ
குங்ஃபூவை பயன்படுத்தி திருடனை வீழ்த்திய இளைஞர் - வைரல் வீடியோ...