வெயிலுக்கு நடுவே டெல்லியை புரட்டி போட்ட மழை.. 4 பேர் பலி.. விமான சேவை பாதிப்பு!
Delhi Heavy Rain : கடந்த சில நாட்களாகவே டெல்லியில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், 2025 மே 1ஆம் தேதி சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததது. இந்த மழையால் டெல்லியில் பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், டெல்லி விமானத்தில் 100க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளன.

டெல்லி, மே 02: தலைநகர் டெல்லியில் 2025 மே 1ஆம் தேதி சுறைக்காற்றுடன் பெய் கனமழையால் நகரமே தத்தளிக்கிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. டெல்லியில் பெய்த கனமழையால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் வெயில் கொளுத்தி எடுக்கிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் வெப்பநிலை கடுமையாக உள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் தான், டெல்லியில் 2025 மே 1ஆம் தேதி மழை புரட்டி எடுத்தது. சுற்றலாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வெயிலுக்கு நடுவே டெல்லியை புரட்டி போட்ட மழை
இதனால், பொதுமக்களின் இயல்பை வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. சுற்றியுள்ள பகுதிகளில் பல மரங்கள் விழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நொய்டாவில் பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
டெல்லியின் மழை தொடர்பான விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். துவாரகாவில் பலத்த காற்று வீசியதால் ஒரு மரம் அறை மீது விழுந்ததில் ஒரு பெண்ணும் அவரது மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனர். சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதை அடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்து வருகின்றனர்.
மேலும், டெல்லியில் மோசமான வானிலை காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்னதாக மூன்று விமானங்கள் அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டன. பெங்களூரு-டெல்லி, புனே-டெல்லி விமானங்கள் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டன.
4 பேர் உயிரிழப்பு
#WATCH | Delhi-NCR witnesses traffic congestion as several trees were uprooted, and vehicles broke down amid heavy waterlogging, due to a rainstorm earlier today.
Visuals from Gurugram. pic.twitter.com/ABy5a2MZrM
— ANI (@ANI) May 2, 2025
டெல்லியில் இருந்து புறப்படும் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. மேலும், 15 முதல் 20 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மணி நேரத்தில் டெல்லியில் 77 மிமீ மழையைப் பதிவு செய்துள்ளது. லோதி சாலையில் 78 மிமீ, பாலத்தில் 30 மிமீ, நஜாஃப்கரில் 19.5 மிமீ, பிதாம்புராவில் 32 மிமீ மழை பதிவாகியுள்ளது. டெல்லிக்கு 2025 மே 4ஆம் தேதி வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தகவலின்படி, வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வானிலை மாறிவிட்டது. உத்தரபிரதேசத்தின் பல நகரங்களிலும் அதிகாலையில் மழை பெய்தது. இது தவிர பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மழையுடன் பலத்த காற்றும் வீசியுள்ளது. இதனால், வட மாநிலங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.