மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் சோகம்.. கணவர் மாரடைப்பால் பலி.. அதிர்ச்சி சம்பவம்!
karnataka man dies heart attack : கர்நாடகாவில் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கணவர் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதான சதீஷ், வளைகாப்பு நிகழ்ச்சி திடீரென மயக்கம் அடைந்துள்ளார். இதனை அடுத்து, மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

உயிரிழந்த நபர்
கர்நாடக, மே 24 : கர்நாடக மாநிலத்தில் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் கணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளைகாப்பு நிகழ்ச்சியில் இளைஞர் திடீரென மயக்க மடைந்துள்ளார். இதனை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறினர். இது அவர்களது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. கர்நாடகாவின் பாகல்கோட்டில் உள்ள ஜமகண்டி பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதான சதீஷி . இவரது மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மாதங்களில் குழந்தை பிறக்க உள்ளது. இந்த நிலையில், சதீஷின் மனைவிக்கு வளைகாப்பு நடத்த திட்டமிடப்பட்டது.
வளைகாப்பு நிகழ்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்த இளைஞர்
அதன்படி, சம்பவத்தன்று, மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி ஜம்கண்டி பகுதியில் நடந்தது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் இருவீட்டாரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். மிகவும் கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது, நிகழச்சியில் திடீரென சதீஷ்க்கு மயங்கி விழுந்துள்ளார்.
இதனை அறிந்த குடும்பத்தினர் உடனே அவரை மங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும், அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர். இதனை கேட்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இன்னும் இரண்டு மாதங்களில் குழந்தை பிறக்க உள்ள நிலையில், சதீஷ் உயிரிழந்தது அவரது மனைவிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தொடரும் உயிரிழப்புகள்
இதுபோன்று திடீரென மாரடைப்பால் உயிரிழப்பது இது முதல்முறையல்ல. கர்நாடக மாநிலம் ஜமகண்டி நகரில், திருமணம் நடந்த சில நிமிடங்களிலேயே மணமகன் மாரடைப்பால் உயிரிழந்தார். அதாவது, கும்பரஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (25). அதே பகுதியைச் சேர்ந்த பூஜா. இவர்கள் இருவரும் திருமணம் நடந்தது. மணமகளுக்கு தாலி கட்டிய சில நொடிகளிலேயே அவர் மணமேடையில் மயங்கி விழுந்துள்ளார்.
இதனை அடுத்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளது. கடந்த இரு வாரத்தில் மட்டும், கர்நாடகாவில் மாரடைப்பபால் இருவர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீக காலமாகவே திடீர் மாரடைப்பால் இளைஞர்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
குறிப்பாக, கொரோனாவுக்கு பிறகு, இதுபோன்று திடீர் மாரடைப்பால் சிறார்கள் முதல் பெரியவர்கள் உயிரிழந்து வருகின்றனர். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மதுபானம், துரித உணவுகள் போன்ற காரணங்களால் மாரடைப்பால் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், அதிகமாக உடற்பயிற்சி போன்ற காரணங்களாலும் ஏற்படுவதாக கூறுகின்றனர்.