Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாகிஸ்தான் பிடியில் இந்திய ராணுவ வீரர், மீட்கும் முயற்சியில் இந்தியா – பரபரப்பு சம்பவம்

Pakistan detains Indian soldier : தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்கு சென்ற இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த .பி.கே.சிங் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரிடம் இருந்து துப்பாக்கி வாக்கி, டாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் பிடியில் இந்திய ராணுவ வீரர், மீட்கும் முயற்சியில் இந்தியா – பரபரப்பு சம்பவம்
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 24 Apr 2025 22:21 PM

டெல்லி, ஏப்ரல் 24: பஹல்காமில் (Pahalgam) நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஏப்ரல் 24, 2025 வியாழக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதே நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) அரசியல் கட்சிகளுக்கு பஹல்காம் தாக்குதல் குறித்து விளக்கமளித்தார். கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தவறு நடந்துள்ளதாக ஒப்புக்கொண்டதாகவும், எதுவும் நடக்கவில்லை என்றால் நாம் ஏன் இங்கே அமர்ந்திருக்க வேண்டும் என்று கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் உளவுத்துறையின் தோல்வி மற்றும் பாதுகாப்பு குறைபாடு பற்றிய பிரச்னையை எழுப்பின. இந்த நிலையில் மத்திய அரசு சார்பில்,  இந்த முறை, உள்ளூர் சுற்றுலா நிறுவனங்கள் அரசாங்கத்திற்குத் தெரிவிக்காமல் சுற்றுலா முன்பதிவுகளை எடுக்கத் தொடங்கினர், மேலும் ஏப்ரல் 20, 2025 முதல் சுற்றுலாப் பயணிகளை அங்கு அழைத்துச் செல்லத் தொடங்கினர். இது குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரியாது. இதன் காரணமாக, அங்கு படையினர் குவிக்கப்படவில்லை என விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு  அனைத்து கட்சிகளும் ஆதரவு

 

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், “பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒற்றுமையாகப் போராட வேண்டும் என்று அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். கடந்த காலங்களில் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா வலுவான நடவடிக்கை எடுத்துள்ளது, எதிர்காலத்திலும் அதைத் தொடரும். இது குறித்து அரசின் சார்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

“சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது, உண்மையில் அனைத்து அரசியல் தலைவர்களும் பாகிஸ்தான் தொடர்பாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு எடுத்த நடவடிக்கையை ஒருமனதாக ஆதரித்தனர். கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய அரசும் நமது நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சகிப்புத்தன்மை கூடாது என்பதை வலியுறுத்தியதாக குறிப்பிட்டார். மேலும் அனைத்து தலைவர்களும் மத்திய அரசால் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தங்களது ஆதரவை தெரிவிப்பதாக கூறினர். என்றார்.

பாகிஸ்தான் பிடியில் இந்திய ராணுவ வீரர்

தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்கு சென்ற இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த .பி.கே.சிங் சிறைபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறது. 17 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றும் கொல்கத்தாவை சேர்ந்ந்த பி.கே.சிங் பஞ்சாப், ஃபிரோஸ்பூர் அருகே எல்லை தாண்டி வந்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவம் அவரை கைது செய்திருக்கிறது. அவரிடம் இருந்து துப்பாக்கி வாக்கி டாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரை மீட்கும்  பணி நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!
விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!...
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?...
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி...
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...