எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ரெட்ரோ?.. ரசிகர்கள் கூறுவது என்ன?

Surya's Retro Movie X Review | கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி வந்த ரெட்ரோ திரைப்படம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளின் இன்று (மே 1, 2025) வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ரெட்ரோ திரைப்படம் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ரெட்ரோ?.. ரசிகர்கள் கூறுவது என்ன?

ரெட்ரோ திரைப்படம்

Updated On: 

01 May 2025 11:07 AM

கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி வந்த ரெட்ரோ (Retro) திரைப்படம் இன்று (மே 1, 2025) காலை 9 மணிக்கு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கார்த்திக் சுப்புராஜ், சூர்யா, பூஜா ஹெக்டே, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் பணியாற்றியுள்ள நிலையில், இந்த திரைப்படம் தொடர்பாக ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்பு எழுந்தது. அதனை தொடர்ந்து, தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள ரெட்ரோ திரைப்படம், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அதிரடி கூட்டணி – திரைக்கு வந்த சூர்யாவின் ரெட்ரோ

கேங்ஸ்டர் பாணியிலான கதைகளை இயக்குவதில் கார்த்திக் சுப்புராஜ் சிறப்பு வாய்ந்தவர். அவரின் திரைப்படங்கள் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருக்கும். அந்த வகையில், ரெட்ரோ காலத்தை மையமாக கொண்டு சூர்யாவை வைத்து ரெட்ரோ திரைப்படத்தை அவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சூர்யா, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், நாசர், மளயாளத்தில் பிரலமாக உள்ள நடிகர் ஜூஜு ஜார்ஜ் உள்ளிட்ட வலுவான கூட்டணி அமைந்துள்ளது. ரெட்ரோ திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணனின் இசை பக்கபலமாக அமைந்துள்ளது. ரிலீசுக்கு முன்னதாகவே ரெட்ரோ திரைப்படம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நிலையில், ரீலீசுக்கு பிறகு ரசிகள் என்ன கூறுகிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா ரெட்ரோ – ரசிகர்கள் கூறுவது என்ன?

ரெட்ரோ திரைப்படம் மிகவும்  அருமையாக உள்ளதாகவும், இது கார்த்திக் சுப்புராஜின் உண்ணதமான படைப்பு என்றும் சிலர் பாசிட்டிவான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

ரெட்ரோ எக்ஸ் விமர்சனம் – 1

ஆனால் சிலர் டெர்ரோ திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு இல்லை என்றும், தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாகவும் விமர்சனம் செய்துள்ளனர்.

ரெட்ரோ எக்ஸ் விமர்சனம் – 2

இவ்வாறு சிலர் பாசிட்டிவாகவும் சிலர் நெகட்டிவாகவும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.