தக் லைஃப் படத்திற்கு முதலில் வைத்த பெயர் இதுதான்… வைரலாகும் கமல் ஹாசனின் பேச்சு

Kamal Haasan: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள படம் தக் லைஃப். இந்தப் படத்திற்கு தக் லைஃப் என்று பெயர் வைப்பதற்கு முன்பு வேறு பெயரை கமல் ஹாசன் வைத்திருந்தனதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தக் லைஃப் படத்திற்கு முதலில் வைத்த பெயர் இதுதான்... வைரலாகும் கமல் ஹாசனின் பேச்சு

கமல் ஹாசன்

Published: 

15 May 2025 13:14 PM

நடிகர் கமல் ஹாசன் (Actor Kamal Haasan) நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் தக் லைஃப். இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் (Director Mani Ratnam) இயக்கியுள்ளார். இதில் நடிகர் சிலம்பரசனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், அபிராமி, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், சான்யா மல்ஹோத்ரா, நாசர், ஐஸ்வர்யா லட்சுமி, பங்கச் திருபதி, அலி ஃபாசல் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தில் இருந்து ஜிங்குச்சா பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டது. திருமண நிகழ்வை சுற்றி வரும் அந்த பாடல் ரசிகர்களையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகரக்ளிடையே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. காரணம் இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் பணியாற்றி இருந்தனர்.

சுமார் 38 வருடங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி இணைந்தது. நாயகன் படம் திரையரங்குகளில் வெளியான போது கமல் ஹாசனின் நடிப்பும் மணிரத்னத்தின் இயக்கத்தையும் ரசிகர்கள் மக்கள் என அனைத்து தரப்பினரும் கொண்டாடித் தீர்த்தனர். அதன் பிறகு இந்த கூட்டணி எப்போ வரும் என்று தொடர்ந்து ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.

இறுதியா இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி அமைத்ததே ரசிகர்களின் உற்சாகத்திற்கும் எதிர்பார்ப்பிற்கும் காரணம் ஆகும். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படம் தொடர்பான அப்டேட்களையும் படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. மேலும் படம் வருகின்ற 5-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகவுள்ளது.

இணையத்தில் வைரலாகும் கமல் ஹாசனின் பேட்டி:

இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் நடிகர் கமல் ஹாசன் தக் லைஃப் படத்திற்கு மணிரத்னமும் அவரும் இணைந்தே திரைக்கதை எழுதியதாக தெரிவித்துள்ளார். மேலும் முதலில் அமர் ஹை என்றே பெயர் வைத்ததாக தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் தொடக்கத்தில் அமர் ஹை என்ற தலைப்பில் ஸ்கிரிப்ட் ஒன்றை எழுயுள்ளார். இந்த கதை இறந்துவிட்டதாகக் எண்ணப்படும் ஒரு மனிதனை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மேலும் அவருடைய பெயர் அமர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இயக்குநர் மணிரத்னம் இந்த ஒன்லைனை விரிவுபடுத்தி, கதையில் தனது எண்ணங்களையும் சேர்த்தார் என்று அந்தப் பேட்டியில் கமல் ஹாசன் தெரிவித்திருந்தார்.