‘பஸ் ஸ்டாண்டில் தனி மரமாக நின்றேன்’ – லோகேஷ் கனகராஜ் உருக்கம்!

Lokesh Kanagaraj : தமிழ் சினிமாவில் தனது முதல் இரு படங்கள் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களைக் கவர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் அதைத் தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் இவர் முன்னதாக பேசிய வீடியோ ஒன்றில், சென்னையில் முதல் அனுபவம் பற்றிக் கூறியிருக்கிறார். அதைப் பற்றிப் பார்க்கலாம்.

பஸ் ஸ்டாண்டில் தனி மரமாக நின்றேன் - லோகேஷ் கனகராஜ் உருக்கம்!

லோகேஷ் கனகராஜ்

Published: 

16 May 2025 08:16 AM

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) திரைப்படங்கள் எப்படி இருக்கும் என்றே சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு படங்களும் எதிர்பார்ப்பதை விடமும் மிகவும் அருமையாக இருக்கும். இவரின் இயக்கத்தில் முதலில் வெளியான படம் மாநகரம் (Maanagaram) . இந்த படத்தில் மூலமாகத்தான் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படமானது மக்கள் மத்தியில் கவனம் பெற்றது. அதைத் தொடர்ந்து கார்த்தியின் (Karthi) கைதி (Kaithi) படத்தை இயக்கினார். இந்த படத்தின் மூலமாகத்தான் ஒட்டுமொத்த பிரபலத்தையும் பெற்றார் என்றே கூறலாம். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 3வது திரைப்படத்தில் விஜய்யுடன் (Vijay)  இணைந்தார். இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான படங்களும் எதிர்பார்த்ததைவிடமும் மிகவும் அருமையாக வந்திருந்தது.

இவர்கள் இருவரின் கூட்டணியில் மட்டும் மாஸ்டர், லியோ என இரு படங்கள் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்தை வைத்தும் படங்களை இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் தற்போது மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகிவரும் படம் கூலி. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்னணி நாயகனாக நடித்துள்ளார்.

லோகேஷ் இன்ஸ்டா பதிவு

இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், ரிலீசிற்கு காத்திருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முன்னதாக கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் அந்த நேர்காணலில் சென்னைக்கு வந்த முதல் நாள் அனுபவம் பற்றிப் பேசியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நான் தொழிலுக்காகச் சென்னைக்கு வரும்போது எனக்கு யாரும் தெரியாது. ஒரு நண்பன் மட்டும் சென்னையில் இருக்கிறான் என்று தெரியும். நான் எனது சொந்த ஊரில் இருந்து கிளம்பி, சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிற்கு வந்திருந்தேன். அப்போது சென்னியில் இருக்கும் ஒரே ஒரு நண்பனுக்கு போன் செய்திருந்தேன், அவர் அப்போதுதான் நைட் ஷிட்ப் வேலை பார்த்துவிட்டு வீட்டிற்குச் சென்று உறங்கிவிட்டார். நான் பஸ் ஸ்டாண்டிற்கு வந்துவிட்டு போன்செய்தேன் அவர் போன் சுவீட் ஆப் என்று வந்தது. அந்த சமயத்தில் எனது வாழ்க்கையே வெறுத்தது போல் இருந்தது என்று கூறியிருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

மேலும் அவர் இந்த காட்சியை மாநகரம் படத்தில், ஹீரோ ஸ்ரீ தனது சொந்த ஊரை விட்டு விட்டு சென்னைக்கு வரும் காட்சியில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த சம்பவத்தை காட்சியாக்கியிருப்பார்.

ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் :

இயக்குநராக சினிமாவில் கலக்கிவந்த லோகேஷ் கனகராஜ் ஹீரோவாகவும் படங்களில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை இயக்கியிருந்த அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.