25 வருடங்களை கடந்தது விஜய் – ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி படம்!
Kushi Movie: நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியான படம் குஷி. இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் மற்றும் ஜோதிகா இருவரும் நாயகன் மற்றும் நாயகியாக நடித்திருந்தனர். படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இன்றுடன் 25 வருடங்களை கடந்துள்ளது.

குஷி படம்
இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் குஷி. இந்தப் படத்தில் நடிகர் விஜய் (Actor Vijay) நாயகனாகவும் நடிகை ஜோதிகா (Actress Jyothika) நாயகியாகவும் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் விஜயகுமார், விவேக், மும்தாஜ், நிழல்கள் ரவி, ஜானகி சபேஷ், நாகேந்திர பிரசாத், ராஜன் பி தேவ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார். படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் படத்தில் மெக்கரீனா பாடலுக்கு நடிகை ஷில்பா ஷெட்டி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் தியேட்டரில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
குஷி படத்தின் கதை என்ன?
நடிகர் விஜயகுமாரின் மகளாக தமிழ்நாட்டில் பிறந்த நடிகை ஜோதிகாவும் நிழல்கள் ரவி மகனாக நடிகர் விஜய் வடநாட்டிலும் பிறங்கின்றனர். இவர்கள் இருவரும் எப்படி இறுதியில் ஒன்று சேர்கிறார்கள் என்பதே படத்தின் கதை. வீட்டிற்கு ஒரே பிள்ளைகளாக பிறந்த இவர்கள் இருவரும் செல்லப் பிள்ளைகளாக வளர்கிறார்கள்.
குழந்தையாக இருக்கும் போதே இவர்கள் சந்திப்பதுபோல ஒரு காட்சியை இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வைத்திருப்பார். மேலும் பள்ளியில் படிக்கும் போதும் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வது போலவும் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கு. இப்படி பிறந்ததில் இருந்தே ஒவ்வொரு கட்டத்திலும் சந்திப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவின் இன்ஸ்டா பதிவு:
இறுதியாக இருவரும் கல்லூரி படிப்பிற்காக சென்னைக்கு வரும் போது சந்தித்து கொள்கிறார்கள். ஒருவொருக்கொருவர் பரிச்சயமாகி பின்பு காதலிக்கத் தொடங்குகின்றனர். காதல் மோதல் என்று செல்லும் இவர்கள் எப்படி இறுதியில் இணைந்தார்கள் என்பதே படத்தின் கதை. படம் வெளியானபோது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
25 வருடங்களை கடந்த குஷி படம்:
2000-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் தற்போது 25 வருடங்களை நிறைவு செய்துள்ளது. படத்தில் வந்த காட்சிகள் தற்போது ரசிகர்களிடையே பிரபலம் ஆகி வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் இதனை கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது படங்களை இயக்குவதில் இருந்து விலகி முழு நேரமாக நடிகராக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.