மாமன் படம் குறித்து நெகிழ்ந்த நடிகர் சூரி – கவனம் பெறும் பதிவு!
Actor Soori: நடிகர் சூரியின் நடிப்பில் திரையரங்குகளில் வரவிருக்கும் படமான மாமன் மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லரை நேற்று மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர், இதற்கு ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனத்தை கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சூரி (Actor Soori) தற்போது நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaran) இயக்கத்தில் உருவான விடுதலைப் படத்தில் நடிகர் சூரி நாயகனாக அறிமுகம் ஆனார் . இந்தப் படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. விடுதலை படத்தை தொடர்ந்து நடிகர் கருடன், கொட்டுக்காளி மற்றும் விடுதலை பாகம் இரண்டு என தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார் நடிகர் சூரி. இந்த நிலையில் நடிகர் சூரி தற்போது மாமன் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்ற ‘விலங்கு’ என்ற வெப் சீரிசை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
நேற்று மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு நடிகர் சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் மாமன் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார். முழுக்க முழுக்க காமெடி மற்றும் செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தைப் பெற்று வருகின்றது.
டிரெய்லரைப் பார்க்கும் போது இந்தப் படம் ஒரு தாய் மாமாவுக்கும் அவரது மருமகனுக்கும் இடையிலான அன்பைச் சுற்றி வருகிறது. இந்த ட்ரெய்லர் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் உணர்வுப்பூர்வமான பினைப்பை வெளிப்படையாக காட்டுகிறது. மேலும் இந்தப் படத்தில் சுவாரஸ்யமான தகவல் என்ன என்றால் இந்தப் படத்திற்கு நடிகர் சூரி கதை எழுதியுள்ளார்.
நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
நான் நீங்க எழுதியிருந்த எல்லா comments-ஐயும் படிச்சேன். ரொம்ப happy-ஆ இருக்கு, மனதளவில் நன்றி!🙏😍💐
“என்ன பெத்தாரு….” இப்போ ஒரு real emotion ❤️👼🙏👍#MaamanFromMay16 pic.twitter.com/YrEmx7wVUb
— Actor Soori (@sooriofficial) May 2, 2025
விடுதலை, கருடன் போன்ற நடிகர் சூரியின் சமீபத்திய படங்களுக்கு ரசிகர்களிடையே பாராட்டு மழை பெற்ற நிலையில், நடிகர் சூரியின் வரவிருக்கும் படமான மாமன் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக நடிகர் சூரி ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் நான் நீங்க எழுதியிருந்த எல்லா கமெண்ட்ஸ்களையும் படிச்சேன், ரொம்ப ஹேப்பியா இருக்கு மனதளவில். நன்றி! என் பெத்தாரு இப்போ ஒரு ரியல் எமோஷன் என்றும் அந்தப் பதிவில் நடிகர் சூரி பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.
மாமன் படத்தில் நடிகர் சூரியுடன் இணைந்து நடிகர்கள் ராஜ்கிரண், விமல், ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, பாபா பாஸ்கர் மாஸ்டர், பிரகீத் சிவன், பால சரவணன், ஜெய பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயாதேவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.