நாகர்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் பிரபல கோலிவுட் இயக்குநர் – யார் தெரியுமா?

Actor Nagarjuna: நடிகர் நாகர்ஜுனா நடிகர் தனுஷ் உடன் இணைந்து குபேரா படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து நடித்துள்ளார். மேலும் இந்தப் படம் ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நாகர்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் பிரபல கோலிவுட் இயக்குநர் - யார் தெரியுமா?

நாகர்ஜுனா

Published: 

05 May 2025 10:42 AM

டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் நாகர்ஜுனா (Actor Nagarjuna). இவர் தெலுங்கு மொழியில் அதிகப் படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் இந்தி படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். 1968-ம் ஆண்டு தெலுங்கு மொழியில் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடிக்கத் தொடங்கினார் நடிகர் நாகர்ஜுனா. அதனைத் தொடர்ந்து 1986-ம் ஆண்டு நடிகர் நாகர்ஜுனா விக்ரம் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடந்து வருடத்திற்கு 4 அல்லது 5 படங்கள் இவரது நடிப்பில் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியானது. மேலும் இந்திப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான ரட்சகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் நாகர்ஜுனா. இந்தப் படத்தை இயக்குநர் பிரவீன் காந்தி இயக்கியுள்ளார். இது இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் ஆகும்.

நடிகர் நாகர்ஜுனா நடிப்பில் வெளியான இந்த ரட்சகன் படத்தில் இவருடன் இணைந்து சுஷ்மிதா சென் நாயகியாக நடித்திருந்தார். மேலும் இது இவர் தமிழில் அறிமுகம் ஆனப் படம் ஆகும். மேலும் இதப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரகுவரன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், வடிவேலு மற்றும் கிரீஷ் கர்னாட் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக கையில் மிதக்கும் கனவா நீ பாடல் தற்போது வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் நாகர்ஜுனா தமிழில் 2011-ம் ஆண்டு நடித்தப் படம் பயணம். பயணிகளுடன் சென்ற விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி வைத்துக்கொண்டு அரசிடம் சில நிபந்தனைகளை வைப்பார்கள். அந்த விமாத்தில் உள்ள பயணிகளை காப்பாற்றும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் நடிகர் நாகர்ஜுனா. படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு நடிகர் கார்த்தி உடன் இணைந்து நடிகர் நாகர்ஜுனா நடித்தப் படம் தோழா. காமெடி ஃபீல் குட் படமாக உருவான இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது நடிகர் நாகர்ஜுனா ரஜினிகாந்த் உடன் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் நடிகர் நாகர்ஜுனாவின் 100-வது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அவரது 100-வது படத்தை பிரபல கோலிவுட் இயக்குநர் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அவர் யார் என்றால் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான நித்தம் ஒரு வானம் படத்தை இயக்கிய ரா.கார்த்தி இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.