சின்ன பையன் தானேனு சாதாரணமா நினச்சுடாதீங்க சார்… கமலுக்கு மாஸ் பதில் கொடுத்த சிம்பு
Actor Kamal Haasan: தக் லைஃப் படப்பிடிப்பின் போது நடிகர் சிம்பு நான் சின்ன பையன்னு நீங்க சாதாரணமா நினைக்காதீங்க சார் என்று பேசியது குறித்து நடிகர் கமல் ஹாசனிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து கமல் ஹாசன் சமீபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிம்பு, கமல் ஹாசன்
நடிகர்கள் கமல் ஹாசன் (Actor Kamal Haasan) மற்றும் சிலம்பரசன் (Actor Silambarasan) நடிப்பில் வருகின்ற ஜீன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் தக் லைஃப். இந்தப் படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி உள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. அப்போது இதில் கலந்துகொண்ட படக்குழுவினர் பேசியது இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழாவை படக்குழு முன்னதாக மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் நாட்டில் போர் சூழல் நிலவி வந்ததால் இதனை படக்குழுவினர் ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். அந்த அறிவிப்பில் இந்தாவிற்குத்தான் முன்னுரிமை, கலை காத்திருக்கட்டும் என்று கமல் ஹாசன் தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு நேற்று 14-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு அறிவித்தது. அதன்படி படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே மாதம் 24-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகும் என்றும் வருகின்ற 17-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர்.
படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#Thuglife #ThuglifeTrailer from May 17 #ThuglifeAudioLaunch from May 24#ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTR
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers @AishuL_ @AshokSelvan @abhiramiact… pic.twitter.com/rC7ezY5p5V— Raaj Kamal Films International (@RKFI) May 14, 2025
மேலும் தக் லைஃப் படத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிம்பு உடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், அபிராமி, சான்யா மல்கோத்ரா, ஜோஜூ ஜார்ஜ், நாசர், ப வடிவுகரசி, ங்கஜ் திரிபாதி என பலர் நடித்துள்ளனர். படத்தில் இருந்து முன்னதாக வெளியான ஜிங்குச்சா பாடல் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் கமல் ஹாசன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது, நான் சிம்புவை படப்பிடிப்பில் பார்த்தபோது நீ என்னை பெரிய நடிகர் என்று நினைத்து பதட்டம் அடைய வேண்டாம். நல்லா நடி என்று நான் சொன்னேன்.
அதற்கு சிம்பு சார் நீங்களும் என்ன சாதாரணமாக நினைக்காதீங்க. சின்ன பையன் தானே என்று நினைக்காமல் உங்கள் நடிப்பை சிறப்பா பண்ணுங்க என்று சொன்னதாக கமல் ஹாசன் அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.