Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நான் சினிமாவைவிட்டு ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் – நடிகர் அஜித் குமார் ஓபன் டாக்

Actor Ajith Kumar: கடந்த 1990-ம் ஆண்டு என் வீடு என் கணவர் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக படத்தில் அறிமுகம் ஆன நடிகர் அஜித் குமார் தற்போது தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான் குட் பேட் அக்லி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

நான் சினிமாவைவிட்டு ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் – நடிகர் அஜித் குமார் ஓபன் டாக்
நடிகர் அஜித் குமார்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 02 May 2025 14:33 PM

தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்தா முழுவதும் தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar). இவர் பல ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதை தவிர மற்ற பொது நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் கலந்துகொள்வதை தவிர்தே வந்தார். சமீபத்தில் துபாயில் நடைப்பெற்ற கார் பந்தையத்தின் (Car Race) போல பல செய்தி நிறுவனங்களுக்கு பேட்டியளிக்க தொடங்கினார். அப்போது அவரது ரசிகர்களுக்கு பல அட்வைஸ்களை கொடுத்தார் நடிகர் அஜித் குமார். அதனைத் தொடர்ந்து தற்போது மத்திய அரசின் பத்ம பூஷன் விருது விழாவில் குடும்பத்துடன் கலந்துகொண்டார் நடிகர் அஜித் குமார். அந்த விருதை அஜித் குமார் வாங்கும் போது அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமார், திரைத்துறையிலிருந்து எதிர்பாராத ஓய்வு பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இந்தியா டுடே செய்திக்கு அளித்த பேட்டியின் போது, வாழ்க்கையின் கணிக்க முடியாத தன்மை மற்றும் அதை முழுமையாக வாழ வேண்டும் என்ற தனது விருப்பம் குறித்து நடிகர் வெளிப்படையாகப் பேசினார்.

நடிப்பில் ஓய்வு பெறுவது குறித்து நடிகர் அஜித்திடம் கேள்வி கேட்டபோது. அதற்கு அவர் தெரிவித்த பதில் ஆச்சரியத்தையும் அதே நேரத்தில் யோசிக்க வைப்பதாகவும் இருந்தது. உங்களுக்குத் தெரியாது ஒருபோது நான் ஓய்வு பெறுவது பற்றி சிந்தித்தது இல்லை. மாறாக நான் ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதே நேரத்தில் நான் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய நடிகர் அஜித் குமார் மக்கள் வாழ்க்கை குறித்து தொடர்ந்து ஏதாவது புகார் கூறுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் தூங்கி எழும் போது உயிருடன் இருப்பது ஒரு வரம். நான் இங்கே தத்துவம் பேச நினைகவில்லை. நான் பல அறுவை சிகிச்சைகள் மற்றும் காயங்களைச் சந்தித்திருக்கிறேன்.

மேலும் புற்றுநோயிலிருந்து தப்பிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்னுடன் இருக்கிறார்கள். வாழ்க்கை எவ்வளவு மதிப்புமிக்கது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். உயிருடன் இருக்கும் வரை என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நான் பயன்படுத்த விரும்புகிறேன். அதை அதிகம் பயன்படுத்த விரும்புகிறேன் என்றும் நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு என் வீடு என் கனவர் மூலம் நடிகராக அறிமுகமான அஜித், வீரம், பில்லா மற்றும் மங்காத்தா போன்ற ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தனது பெயரை சினிமாவில் நிலைநிறுத்தியுள்ளார். ஏப்ரல் மாதம் 28-ம் தேதி 2025-ம் அன்று ராஷ்டிரபதி பவனில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சு சாம்சனுக்கு சப்போர்ட்.. ஸ்ரீசாந்துக்கு 3 ஆண்டுகள் தடை!
சஞ்சு சாம்சனுக்கு சப்போர்ட்.. ஸ்ரீசாந்துக்கு 3 ஆண்டுகள் தடை!...
முத்தலாக் சொன்ன கணவர்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
முத்தலாக் சொன்ன கணவர்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு...
ரூ.15,000 பட்ஜெட்டில் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்கள்!
ரூ.15,000 பட்ஜெட்டில் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்கள்!...
பாதுகாப்பு குலைந்ததா? தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்கள்
பாதுகாப்பு குலைந்ததா? தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்கள்...
ஹீரோவாக அறிமுகமாகும் விஜே சித்துவிற்கு வாழ்த்து கூறிய தனுஷ்!
ஹீரோவாக அறிமுகமாகும் விஜே சித்துவிற்கு வாழ்த்து கூறிய தனுஷ்!...
திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை - நயினார் நாகேந்திரன்
திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை - நயினார் நாகேந்திரன்...
குருபெயர்ச்சி 2025.. சென்னையில் செல்ல வேண்டிய குருபகவான் கோயில்!
குருபெயர்ச்சி 2025.. சென்னையில் செல்ல வேண்டிய குருபகவான் கோயில்!...
சிம்புவின் STR 49 படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்..?
சிம்புவின் STR 49 படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்..?...
நெட்ஃபிளிக்ஸில் மிஸ் செய்யக்கூடாத டாப் தென்னிந்திய படங்கள் இதோ
நெட்ஃபிளிக்ஸில் மிஸ் செய்யக்கூடாத டாப் தென்னிந்திய படங்கள் இதோ...
தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?
தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?...
3 ஆண்டுகளில் இந்திய யூடியூப் கிரியேட்டர்களுக்கு ரூ.21,000 கோடி!
3 ஆண்டுகளில் இந்திய யூடியூப் கிரியேட்டர்களுக்கு ரூ.21,000 கோடி!...