Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஓய்வு காலத்துக்கு திட்டமிடுகிறீர்களா? தெரிந்துகொள்ள வேண்டிய 7 தகவல்கள்

Retirement Planning Guide: ஓய்வு வாழ்க்கை என்பது அமைதியாக எந்த பிரச்னையும் இல்லாமல் கழிக்க வேண்டிய ஒரு முக்கியமான நேரம். ஆனால் அதற்கான திட்டமிடலை இப்போது இருந்தே தொடங்கப்பட வேண்டும். ஓய்வு காலத்துக்கு முன் திட்டமிட வேண்டிய முக்கியமான 7 தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஓய்வு காலத்துக்கு திட்டமிடுகிறீர்களா? தெரிந்துகொள்ள வேண்டிய 7 தகவல்கள்
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 25 Apr 2025 15:56 PM

வாழ்க்கை முழுவதும் உழைத்த பிறகு அமைதியான ஓய்வு வாழ்க்கையை (Retirement) பலரும் ஆசைப்படுகிறோம். ஆனால் அப்பொழுதும் நிதி பற்றாக்குறையால் மீண்டும் வேலைக்கு செல்லும் நிலை இருக்கக் கூடாது. அதுவரை உழைத்த உழைப்புக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். மேலும் வயது அதிகமாகும்போது கணவன் – மனைவி இருவரது மருத்துவ செலவுகளும் அதிகரிக்கலாம். அதுவரை வாங்கி வந்த சம்பளம் திடீரென நிறுத்தப்படும் என்பதால் குடும்பத்தை கையாள்வது சிரமமாக இருக்கும். குழந்தைகளின் கல்விக்கு (Education) திட்டமிட வேண்டும். இதனை மனதில் வைத்து நமது பொருளாதார நிலையை கட்டமைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக இப்பொழுது இருந்தே சேமிக்க தொடங்குவோம். ஆனால் சேமிப்பு (Savings) மட்டும் போதாது. அதனை எங்கே, எப்படி சேமிப்பது என்பதையும் சேர்த்தே திட்டமிட வேண்டும்.

ஓய்வுபெறும் வயதை தீர்மானிக்கவும்

எந்த வயது வரை உழைக்க வேண்டும் எப்பொழுது ஓய்வு பெற வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும். அதற்கு ஏற்ப திட்டங்களைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய துவங்குவது அவசியம்.

நிதி தேவையை தீர்மானிப்பது அவசியம்

ஓய்வுபெற்ற பிறகு மாதந்தோறும் தேவைப்படும் தொகையை தீர்மானிக்க வேண்டும். வீட்டு வாடகை, மருத்துவம் உணவு, பயணம் போன்றவற்றின் அடிப்படையில் நமக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதை அறிந்து திட்டமிட வேண்டும்.

மருத்துவக் காப்பீடு மிகவும் அவசியம்

வயது அதிகமாகும்போது மருத்துவ செலவுகளும் அதிகரிக்கும். எனவே அதற்கு ஏற்ப சரியான மருத்துவக் காப்பீடு திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கடனை சரியாக கையாள வேண்டும்

வேலையில் இருந்து ஓய்வுபெறுவதற்கு முன் கடன்கள், இஎம்ஐகள் என அனைத்தையும் முடிக்க திட்டமிட வேண்டும். இது ஓய்வு காலத்தில் ஏற்படும் நிதி அழுத்தத்தைக் குறைக்கும்.

முதலீட்டு வாய்ப்புகள்

பிபிஎப், தேசிய ஓய்வூதிய திட்டம், மியூச்சுவல் ஃபண்ட், ஃபிக்சட் டெபாசிட், மூத்த குடிமக்கள் திட்டம் போன்ற பல்வேறு சேமிப்பு திட்டங்களை தேர்ந்தெடுத்து சேமிக்க வேண்டும். குறிப்பாக வட்டி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு முதலீடு செய்வது அவசியம்.

செலவுகளை திட்டமிட வேண்டும்

ஓய்வூதிய நாட்களில் உங்களது விருப்பங்களுக்கு ஏற்ப வியாபாரம், பயணங்கள் போன்ற செலவுகளை மனதில் வைத்து திட்டமிட வேண்டும்.

குடும்ப உறுப்பினர்களுக்கான திட்டமிடல்

உங்கள் மனைவி மற்றும் மகள்களின் நிதி பாதுகாப்பை மனதில் வைத்து வங்கி மற்றும் முதலீடு திட்டங்களில் நாமினியாக சேர்க்கலாம். மேலும் சொத்துக்களை பிரித்துக்கொடுக்கலாம். அதனை முன் கூட்டியே செய்வது ஓய்வு காலத்தில் நமது நிம்மதிக்கு வழிவகுக்கும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)

 

விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!
விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!...
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?...
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி...
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...