Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிம்லா ஒப்பந்தம் ரத்து.. இந்தியாவுடன் போருக்கு தயாராகிறதா பாகிஸ்தான்?

Pakistan Government Cancelled Shimla Agreement | ஜம்மு & காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பாகிஸ்தான் மீது இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அரசு பதில் நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கியுள்ளது. அதன்படி, சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்து அந்த பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

சிம்லா ஒப்பந்தம் ரத்து.. இந்தியாவுடன் போருக்கு தயாராகிறதா பாகிஸ்தான்?
ஷெபாஸ் ஷெரீப்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 24 Apr 2025 20:54 PM

பாகிஸ்தான், ஏப்ரல் 24 : 1972 ஆம் ஆண்டு இந்தியாவுடன் போடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தை (Shimla Agreement) ரத்து செய்வதாக பாகிஸ்தான் அரசு (Pakistan Government) அறிவித்துள்ளது. சிந்து நதி (Indus River) ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்து, சிந்து நதிநீரை நிறுத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவுடன், பாகிஸ்தான் போருக்கு தயாராகும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன, அது ரத்து செய்யப்படுவதன் மூலம் இந்திய அரசுக்கு என்ன என்ன சவால்கள் ஏற்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலகையே உலுக்கிய ஜம்மு & காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 27 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது உலகையே உலுக்கிய நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இதன் காரணமாக பாகிஸ்தான் மீது இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில், தற்போது பாகிஸ்தான் அரசு பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடங்கியுள்ளது.

சிம்லா ஒப்பந்தம் ரத்து – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன – அதன் முக்கியத்துவம் என்ன?

பயங்கரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுக்கு சென்றுக்கொண்டு இருந்த சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிம்லா ஒப்பந்தத்தை அந்த நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. 1972 போரை நிறுத்தும் வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடயே கையெழுத்தான ஒப்பந்தம் தான் சிம்லா ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் எல்லை பிரச்னையை அமைதியான  முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டது. தற்போது பாகிஸ்தான் அரசு இந்த ஒப்பந்ததத்தை ரத்து செய்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவாகும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!
விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!...
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?...
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி...
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...