Viral Video : ஆபத்தான முறையில் பயணம்.. ரயிலில் தொங்கிக்கொண்டு சென்ற இளம் பெண்!
Womans Dangerous Train Ride : மும்பை உள்ளூர் ரயிலில் இளம்பெண் ஒருவர் வாசலில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அபாயகரமான செயல் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அந்தப் பெண் மீது ரயில்வே துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

வைரல் வீடியோ
இந்தியாவில் (India) பொதுவாக ரயில் போக்குவரத்து சேவைகளை (Rail transport services) மக்கள் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வட இந்தியாவில் மக்களின் முழுப் பயன்பாடாக இருந்து வருவது ரயில் சேவைதான். அந்த வகையில் இளைஞர்கள் பலரும் ரயிலில் ஆபத்தன முறையில் தொங்கி கொண்டு செல்லும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருவதுண்டு. மேலும் இந்த விபரீத செயலால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இணையத்தில் தற்போது வீடியோ ஒன்று தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் இளம் பெண் ஒருவர் (young woman) ரயிலில் வாசலில் உள்ள கம்பியில் தொங்கியபடியே பயணம் (Traveling on a tightrope) செய்துள்ளார். இதை ரயிலில் உள்ளே இருந்த மற்றொரு நபர் படம்பிடித்துள்ளார். அந்த இளம்பெண் ரயிலில் வாசலில் இருக்கும் கம்பியைப் பிடித்தவாறு, வெளியில் தொங்கியபடியே ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளார்.
இந்த வீடியோவானது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களைத் தொடர்ந்து, இளம்பெண்களும் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடும் நிகழ்வானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது மும்பையில் உள்ள லோக்கல் ரயிலில் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை ஒட்டி மும்பை ரயில்வே துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவை நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண் :
#ViralVideo #CRFixLocalTrainDelays Today’s Ladies Special from Kalyan was delayed by 40 mins, forcing women to hang on the footboard—an unsafe and risky commute. Railways term this dangerous, yet delays continue. @AshwiniVaishnaw pls review delay data. @MumRail @rajtoday pic.twitter.com/vnhxTIyFD6
— Mumbai Railway Users (@mumbairailusers) May 9, 2025
இந்த வீடியோவில், அந்த இளம் பெண் ரயிலில் வாசலில் உள்ள கம்பியைப் பிடித்தபடி ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த ரயிலில் உள்ளே இருந்த நபர் ஒருவர் இந்த வீடியோவை எடுத்திருக்கிறார். அந்த இளம் பெண் வீடியோ எடுப்பதை அறிந்தும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளார் . படியில் ஆபத்தாகத் தொங்கியபடியே இளம் பெண் செய்த செயலானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வட இந்தியாவில் இளைஞர்கள்தான் இவ்வாறு நடந்துகொள்வார்கள் என்றால் அவர்களை விட இளம் பெண்களும் இவ்வாறு ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என பலரும் தங்களின் கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.
வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் :
இந்த வீடியோவின் கீழ் பல பயனர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள், அதில் சில கருத்துக்களைப் பற்றிப் பார்க்கலாம். இதில் முதல் பயனர் ஒருவர் “ரயிலில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன் ஆனால், ஒரு பெண் இவ்வாறு அட்டகாசம் செய்யும் வீடியோவை இப்போதுதான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். இரண்டாவது நபர் “இந்தியாவில் இதைவிடமும் கொடுமையான விஷயங்கள் இருக்கிறது, ஆனால் இந்த பெண் செய்த செயல் என்னாலேயே நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்.