Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கூகுள் போட்டோஸின் புதிய தொழில்நுட்பம் – ஆபத்தானதா? வலுக்கும் சந்தேகம்

Google’s new scanning technology : கூகுளின் புதிய ஸ்கேனிங் தொழில்நுட்பம் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது, ஆனால் இதன் ஓபன் சோர்ஸ் இல்லாமல் இருப்பது பயனர்களிடையே சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. இதனால் பயனர்கள் இதன் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்புகின்றனர்.

கூகுள் போட்டோஸின் புதிய தொழில்நுட்பம் – ஆபத்தானதா? வலுக்கும் சந்தேகம்
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 28 Apr 2025 17:50 PM

நமது புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை ஆன்லைனில் சேமித்து பாதுகாப்பதற்காக கூகுள் போட்டோஸ் (Google Photos) என்ற சேவையை கூகுள் வழங்குகிறது. இதில், பயனர்கள் எளிதாக புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளலாம், எடிட் செய்யலாம். கூகுள் போட்டோஸ், அதிக ஸ்டோரேஜ் போன்ற வசதிகளை வழங்குகிறது. மேலும் ஒரு போட்டோ எங்கே, எப்போது எடுத்தோம் போன்ற தகவல்களையும் நமக்கு அளிக்கிறது. மேலும் ஆண்டுக்கு ஒரு முறை நமக்கு நினைவூட்டுகிறது. இந்த நிலையில் கூகுளின் போட்டோ ஸ்கேன் தொழில்நுட்பம் தற்போது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.  ஆண்ட்ராய்டு (Android) தொலைபேசிகளில் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியபோது, அதன் யூசர்களின் அனுமதியின்றி இந்த போட்டோ ஸ்கேன் நிறுவப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இது ஒருவரின் பிரைவசி மற்றும் தனிப்பட்ட டேட்டா கட்டுப்பாட்டை பாதிக்கும் என்ற சந்தேகங்களை அது உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

கூகுளின் புதிய டெக்னாலஜி பாதுகாப்பானதா?

இந்த போட்டோ ஸ்கேனிங் டெக்னாலஜி அறிமுகப்படுத்தப்பட்டபோது, கூகுள் அதன் யூசர்களின் அனுமதியின்றி புகைப்படங்களை ஸ்கேன் செய்யப்போவதில்லை என்று உறுதிப்படுத்தியது. ஃபோர்ப்ஸின் அறிக்கையின் படி, SafetyCore எனும் புதிய அமைப்பு, ஆண்ட்ராய்டு போனில் உள்ள போட்டோ உள்ளிட்ட டேட்டாக்களை பாதுகாப்பாக மற்றும் பிரைவசியுடனும் வகைப்படுத்த உதவும் என்று கூகுள் தெரிவித்தது.  இதில், அனைத்து செயல்பாடும் போனில் மட்டுமே நடைபெறும் எனவும் எந்தவொரு டேட்டாவும் கூகுளுக்கு அனுப்பப்படாது என்றும் உறுதி தெரிவித்திருந்தது.

கூகுள் மேசேஜ் மூலம் எச்சரிக்கை

தற்போது இதற்காக கூகுள் மெசேஜ் இந்த புதிய ஆப்சன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூகுள் மெசேஜில் பிரச்னைக்குரிய புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கை கொடுப்பதுடன் அதனை மங்கலாக்கியும் காட்டுகிறது. அதன் பிறகு யூசர்கள் அதனை தெளிவாக பார்க்கும்படியோ அல்லது மறைக்கும்படியோ செய்ய முடியும்.

கூகுள் இந்த ஸ்கேனிங் செயல்பாடு போனின் உள்ளே மட்டுமே நடைபெறும்  எனவும் எந்தவொரு டேட்டாவையும் கூகுளுக்கு அனுப்பாதும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதன் ஓபன் சோர்ஸ் இல்லாதது யூசர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.. SafetyCore மற்றும் அதன் கீழ் உள்ள மெஷின் லேர்னிங் போன்றவை ஓபன் சோர்ஸாக  கிடைக்கவில்லை. இதனால் பயனர்களுக்கு அதன் தவறான பயன்பாடு குறித்து சந்தேகம் எழுந்துள்ளன.

இதன் மூலம், கூகுளின் புதிய போட்டோ ஸ்கேன் தொழில்நுட்பம் ஆண்ட்ராய்டு போன்களின் டேட்டாக்களை  ஸ்கேன் செய்கிறது. அவை பாதுகாப்பானது என கூறப்பட்டாலும் அந்த தொழில்நுட்பம் ஓபன் சோர்ஸ் இல்லாததால், பயனர்கள் முழுமையாக இதன் செயல்பாடு மற்றும் பயன் குறித்து சந்தேகங்களை கொண்டுள்ளனர். இந்த விவாதம், பயனர் பிரைவசி மற்றும் ஏஐ மூலம் டேட்டாக்களை பரிசோதனை செய்வதில் உள்ள குறைபாடுகளை முன்னிலைப்படுத்துகிறது. ஆனால் இது குறித்து முழுமையான விளக்கங்கள் கூகுள் அளிக்கவில்லை.

உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?...
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா...
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!...
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்......
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்...
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!...
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்...