விஜய் கட்சி தொண்டரின் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்… நடந்தது என்ன?
Vijay Fan Attacked by Police at Madurai Airport: கொடைக்கானல் படப்பிடிப்பு முடிந்து மதுரை விமான நிலையம் வழியாக சென்னை சென்ற விஜய்யை வரவேற்க வந்த ரசிகர் இன்பராஜின் தலையில் பாதுகாப்பு காவலர் துப்பாக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 33 ஆண்டுகால ரசிகரான இன்பராஜ் மதுரை விஜய் ரசிகர் மன்றத் தலைவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜய் கட்சி தொண்டரின் தலையில் துப்பாக்கி வைத்த போலீஸ்
மதுரை மே 05: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் (Tamilaga Vetri Kazhaga Leader Vijay) , கொடைக்கானலில் படப்பிடிப்பை முடித்துவிட்டு மதுரை விமான நிலையம் வழியாக சென்னைக்கு (Chennai) புறப்பட்டபோது பரபரப்பு ஏற்பட்டது. விஜயை சால்வையுடன் வரவேற்க வந்த அவரது ரசிகர் இன்பராஜின் (Fan Inbaraj) தலையில், பாதுகாப்பு காவலர் ஒருவர் துப்பாக்கி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பின்னர் விசாரணையில், இன்பராஜ் மதுரை விஜய் ரசிகர் மன்ற தலைவர் (Madurai Vijay Fan Club President) என்பதும் தெரியவந்தது. இவர் விஜயின் தீவிர ரசிகராக 33 ஆண்டுகளாக தொடர்ந்து பின்தொடர்கிறார் என்றும் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படப்பிடிப்பிக்கு சென்ற தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், கொடைக்கானலில் நடைபெற்று வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னைக்கு புறப்படுவதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது நடந்த ஓர் அதிரடியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் விமான நிலையத்திற்கு வரவேண்டாம்: விஜய்
விஜய், தனது அரசியல் பயணத்தையும், சினிமா பணி முன்னெடுப்பையும் ஒரே நேரத்தில் கவனித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக கொடைக்கானலில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த அவர், சென்னைக்கு செல்லும் முன் மதுரை விமான நிலையத்தில் வந்து சேர்ந்தார். இதற்கு முன், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விஜய், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என கேட்டுக்கொண்டிருந்தார்.
விஜய் கட்சி தொண்டரின் தலையில் துப்பாக்கி வைத்த போலீஸ்
ஆனால், அவரது கோரிக்கையை மீறி, பலர் விமான நிலையத்திற்கு வந்தனர். குறிப்பாக, விஜயை பின்தொடர்ந்து வந்த ஒருவன், விமான நிலையத்திற்குள் நுழைந்தார். அந்த நபர், விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்றபோது, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர், அவனது தலையில் துப்பாக்கியை வைக்க முயற்சித்தார். இந்த சம்பவம் சற்று நேரத்துக்குள் பரபரப்பாக மாறியது. விமான நிலையம் மற்றும் அருகிலுள்ள சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
என்னை சுட்டாலும் பரவாயில்லை – ரசிகர் இன்பராஜ்
பின்னர் விசாரணையில், தலையில் துப்பாக்கி வைக்கப்பட்டவர் மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் இன்பராஜ் என தெரியவந்தது. அவர், “நான் விஜயின் தீவிர ரசிகன். 33 ஆண்டுகளாக அவரை பின்பற்றுகிறேன். விஜயின் திருமணத்திலும் பங்கேற்றேன். இந்த முறை வழக்கம்போல சால்வை கொடுத்து வழியனுப்ப வந்தேன். ஆனால் தலையில் துப்பாக்கி வைத்தது எனக்கு தெரியவில்லை. என்னை சுட்டாலும் பரவாயில்லை. விஜய்க்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன்” என்று உணர்ச்சி வலியுடன் கூறினார்.
யார் மீது தவறு என்பது கண்டறியப்பட்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இந்த சம்பவம் குறித்து ஆரம்ப விசாரணை தொடங்கியுள்ளதாகவும், யார் மீது தவறு என்பது கண்டறியப்பட்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், “பொது இடத்தில் காவலர் துப்பாக்கியை காட்டுவது உரியதா?” என்ற கேள்வி சமூக ஊடகங்களில் பலரிடமும் எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.இது தவெக தலைவரின் பாதுகாப்பு குறித்து சிக்கலான கேள்விகளை எழுப்பியுள்ளது.