615 பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. எப்போது அப்ளை பண்ணலாம்?

TNPSC Combined Technical Service : உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 48 பதவிகளுக்கான 615 காலிப் பணியிடஙகளை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கு 2025 ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு 2025 மே 27ஆம் தேதி தொடங்கி ஜூன் 25ஆம் தேதி முடிவடைகிறது.

615 பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. எப்போது அப்ளை பண்ணலாம்?

டிஎன்பிஎஸ்சி

Updated On: 

22 May 2025 07:35 AM

சென்னை, மே 22 : உதவிப் பொறியாளர் உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த பணியிடங்களுக்கு தேர்வு (TNPSC Combines Service technical Job) நடைபெறுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொழில்நுட்பம் சார்ந்த பணியிடங்களுக்கு 2025 ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை கணினி வழியாக தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 2025 மே 27ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பெரும்பாலான பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனும் டிஎன்பிஎஸ்சி (TNPSC Recruitment 2025) நிரப்பி வருகிறது. ஆண்டுதோறும் குரூப் வாரியாக தேர்வு நடத்தப்பட்டு, அதற்கு ஏற்ப பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

தொழில்நுட்ப பணிகளுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

விஏஓ முதல் துணை ஆட்சியர் வரை பல்வேறு காலிப் பணியிடங்கள் குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 என தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில், தற்போது முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை, வேளாண் துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் என பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 615 தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தேர்வுக்கு 2025 மே 27ஆம் தேதி இதற்காக விண்ணப்பித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 2025 மே 27ஆம் தேதி முதல் ஜூலை 25ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. தொழில்நுட்ப தேர்வுகள் 2025 ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பம் சில நாட்களில் தொடங்க உள்ளது. தேர்வர்கள் விண்ணப்பத்திற்கான கட்டணத்தை யுபிஐ செயலி மூலம் செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

முன்னதாக, குரூப் 4 தேர்வுக்கு இன்னும் சில நாட்களில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைய உள்ளது. விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 3,935 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்காக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 2025 மே 24ஆம் தேதியாகும். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள 2025 மே 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 3 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

குரூப் 4 தேர்வு 2025 ஜூலை 12ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலை 9.30 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது.  இதற்கான விண்ணப்பம் இன்னும் 2 நாட்களில் முடிவடைய உள்ளது. எனவே, தேர்வர்கள் உடனே விண்ணப்பித்து கொள்ளுங்கள். மேலும், அதற்கான கட்டணத்தை செலுத்தி கொள்ளுங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.