Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோவையில் பூத் கமிட்டி மாநாடு.. தேதி குறித்த விஜய்.. ஏற்பாடுகள் தீவிரம்!

Tamilaga Vettri Kazhagam Vijay : தமிழக வெற்றிக் கழகத்தில் பூத் கமிட்டி மாநாடு கோவை மாவட்டத்தில் 2025 ஏப்ரல் 26,27ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தகவல் வெளியகி உள்ளது. கட்சி தொடங்கியதில் இருந்தே வட மாவட்டங்களை குறிவைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வந்த விஜய், தற்போது , அவரது பார்வை கொங்கு மண்டலம் பக்கம் திரும்பியுள்ளது.  

கோவையில் பூத் கமிட்டி மாநாடு.. தேதி குறித்த  விஜய்.. ஏற்பாடுகள் தீவிரம்!
தமிழக வெற்றிக் கழகம் விஜய்Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 Apr 2025 06:49 AM

சென்னை, ஏப்ரல் 18: தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) பூத் கமிட்டி (TVK Booth Committee) மாநாடு கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2025 ஏப்ரல் 26,27ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர். 5 மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டிருக்கிறது. அதில், முதற்கட்டமாக கோவையில் பூத் கமிட்டி மாநாடு 2025 ஏப்ரல் 26,27ஆம் தேதிகளில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

கோவையில் பூத் கமிட்டி மாநாடு

கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, கட்சியை பலப்படுத்த தீவிரமாக விஜய் செயல்பட்டு வருகிறார். கட்சி தொடங்கிய வேகத்திலேயே விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தினார்.

அதன்பிறகு, கட்சி ரீதியாக மாவட்டங்களாக பிரித்து, அதற்கு மாவட்ட செயலளார்கள், பொறுப்பாளர்கள் என ஒரு மாவட்டத்திற்கு 3 பேரை நியமித்தார். அண்மையில், தமிழக வெற்றிக் கழகத்தில் செயற்குழு கூட்டத்தை நடத்தி முடித்த கையோடு, கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவையும் நடத்தினார்.

அடுத்ததாக, தற்போது பூத் கமிட்டி மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருக்கும் திராவிட கட்சிககளின் வெற்றிக் காரணமே பூத் கமிட்டி தான். அதில் தான் தற்போது விஜய் கவனம் செலுத்தி வருகிறார்.

5 மண்டலமாக பூத் கமிட்டி மாநாட்டை விஜய் நடத்த திட்டமிட்டுள்ளார். அதாவது, வடக்கு, மேற்கு, தெற்கு? மத்திய மண்டலத்தில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக கோவை மாவட்டத்தில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது.

தேதி குறித்த விஜய்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2025 ஏப்ரல் 26,27ஆம் தேதிகளில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இந்த மாநாட்டில் கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. கொங்கு மண்டலத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் இடத்தில், விஜய் தனது முதல் பூத் கமிட்டி மாநாட்டை நடத்துவது பெரிதும் அவருக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு சரியாக ஓராண்டு இருக்கிறது. இதனால், அரசியல் அரசியல் கட்சிகள் பலரும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மீண்டும் ஆட்சியை தக்க வைக்க திமுக முனைப்பு காட்டி வரும் நிலையில்,  திமுகவை வீழ்த்து ஆட்சி கட்டிலில் அமர அதிமுக வியூகம் அமைத்து வருகிறது. அதே நேரத்தில், தமிழக வெற்றிக் கழகமும் இந்த ரேஸில் தீவிரமாக உள்ளது.

விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!
விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!...
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?...
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி...
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...