Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இரவில் மட்டும் மலரும் பிரம்ம கமலப்பூக்கள்… பூத்துக்குலுங்குவது எங்கே?

Nishagandhi Flowers: கொடைக்கானல் உகார்தே நகர் பகுதியில் ஜான் கென்னடி வீட்டில் நிஷாகந்தி (பிரம்ம கமல) பூக்கள் இரவில் மலர்ந்து மக்களை கவர்கின்றன. வெண்மை, இளஞ்சிவப்பு நிறங்களில் பூக்கும் இம்மலர்கள், காய்ச்சல், சளி, ஆஸ்துமா போன்றவற்றுக்கு மருத்துவ பயனளிக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் மலர்களை ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

இரவில் மட்டும் மலரும் பிரம்ம கமலப்பூக்கள்… பூத்துக்குலுங்குவது எங்கே?
இரவில் மட்டும் மலரும் பிரம்ம கமலப்பூக்கள்Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 23 Apr 2025 10:44 AM

கொடைக்கானல் ஏப்ரல் 23: கொடைக்கானல் உகார்தே நகர் (Kodaikanal Ugarte Nagar) பகுதியில் ஜான் கென்னடி என்பவர் வீட்டில், இரவில் மட்டும் மலரும் அரிய நிஷாகந்தி (பிரம்ம கமல) பூக்கள் (Rare Nisha Kanthi (Brahma Kamala) Flowers) மாடித்தோட்டத்தில் மலர்கின்றன. வெண்மை மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் பூக்கும் இம்மலர்கள், மணம்வீசி பார்வையாளர்களை கவர்கின்றன. இவை மருத்துவ குணம் கொண்டவை என்றும், காய்ச்சல், சளி, ஆஸ்துமா போன்றவற்றுக்கு பயன்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. மலர்ந்த சில மணி நேரங்களில் குவிந்து மொட்டுகளாக மாறும் இந்த பூக்களை, மக்கள் விளக்கேற்றி வழிபடுவதும் வழக்கம். சுற்றுலாப் பயணிகள் இம்மலர்களை ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

மாடித்தோட்டத்தில் மலர்ந்த நிஷாகந்தி பூக்கள்

கொடைக்கானல் உகார்தே நகர் பகுதியில் வசிக்கும் ஜான் கென்னடி என்பவர், தனது வீட்டின் மாடித்தோட்டத்தில் நிஷாகந்தி என அழைக்கப்படும் அரிய பிரம்ம கமலப்பூக்களை வளர்த்து வருகிறார். இந்த மலர்கள் வெள்ளை நிறத்தில், மூன்று இதழ்கள் கொண்டதாகவும், மிக அழகாகவும் இருக்கும்.

இவை கள்ளிச்செடி இனத்தை சேர்ந்தவை என்றும், தண்டுகளை வெட்டிப் புதைத்தாலே வளரக்கூடிய தன்மையுடையவை என்றும் கூறப்படுகிறது. சுமார் 10 மீட்டர் சுற்றளவில் நறுமணம் வீசியும், இம்மலர்கள் பெரும்பாலும் இரவில்தான் மலரக்கூடிய தன்மை கொண்டவை. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் இந்த அதிசய பூ இலையில் இருந்தே பூ பூக்கிறது.

மருத்துவ பயன்கள் உள்ள நிஷாகந்தி

மலரும் நேரத்தில் சில மணி நேரத்துக்குள் பூக்கள் குவிந்து மொட்டுகளாக மாறும் இம்மலர்கள், அவ்வளவு நேரத்தில் பொதுமக்கள் விளக்கேற்றி வழிபடுவதை காணலாம். மேலும், காய்ச்சல், சளி, மூச்சுக் குழாய் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு நிஷாகந்தி சிறந்த இயற்கை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் காட்சிகள்

இந்த அரிய மலர்களை காண அருகிலுள்ள மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரி, புகைப்படம் எடுத்து ரசித்து செல்கின்றனர். வெண்மை மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் பூத்துக் குலுங்கும் இம்மலர்கள், இரவில்தான் மலர்வதால், இரவுப் பயணிகளுக்கு இது ஒரு புதிய அனுபவமாக அமைந்துள்ளது.

கோடை கால கூட்ட நெரிசல்

கோடை விடுமுறையை முன்னிட்டு தற்போது நாடு முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலை நோக்கி திரண்டுள்ளனர். மோயர் பாயிண்ட், பிரையன்ட் பூங்கா, பைன் மரக்காடு, நட்சத்திர ஏரி போன்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளில் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.

கொடைக்கானல் – இயற்கையுடன் வாழும் ஒரு பரிசு

மேற்கு தொடர்ச்சி மலையின் அரவணைப்பில் அமைந்துள்ள கொடைக்கானல், குளிர்ந்த காலநிலை, துள்ளும் அருவிகள், படகு சவாரி, சைக்கிள் மற்றும் குதிரை சவாரிகள் போன்ற அனுபவங்களுடன், நவீன வசதிகள் உள்ள விடுதிகள், உணவகங்கள் என்பவைகளால் அனைத்து வயதினருக்கும் இன்பம் தரும் ஒரு சுற்றுலா தலமாக உள்ளது.

இந்த பசுமை மலை நகரில் இப்போது பிரம்ம கமலப் பூக்களின் அதிசய மலர்ச்சி கூட, சுற்றுலாப் பயணிகள் மனதை கவரும் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.

அதிகரிக்கும் தெரு நாய்க்கடி தொல்லை... இதை செய்ய முதல்வர் உத்தரவு
அதிகரிக்கும் தெரு நாய்க்கடி தொல்லை... இதை செய்ய முதல்வர் உத்தரவு...
போருக்கு ரெடியான இந்தியா... போர் விமானங்களை இறக்கி சோதனை
போருக்கு ரெடியான இந்தியா... போர் விமானங்களை இறக்கி சோதனை...
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று நடக்கும் பாராட்டு விழா
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று நடக்கும் பாராட்டு விழா...
லவ் பண்ணுவியா மாட்டியா..? மாணவியை வீடு புகுந்து துரத்திய இளைஞர்..
லவ் பண்ணுவியா மாட்டியா..? மாணவியை வீடு புகுந்து துரத்திய இளைஞர்.....
தமிழ் பெயர் பலகை இல்லாத கடைகள்.. ரூ,2000 அபராதம்!
தமிழ் பெயர் பலகை இல்லாத கடைகள்.. ரூ,2000 அபராதம்!...
வெயிலுக்கு சின்ன பிரேக்.. வெளுக்கப்போகும் கனமழை!
வெயிலுக்கு சின்ன பிரேக்.. வெளுக்கப்போகும் கனமழை!...
மாற்றுத்திறனாளி பயணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
மாற்றுத்திறனாளி பயணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?...
கோடையில் சிறப்பு வகுப்புகள்.. தனியார் பள்ளிகளுக்கு வார்னிங்!
கோடையில் சிறப்பு வகுப்புகள்.. தனியார் பள்ளிகளுக்கு வார்னிங்!...
GTvSRH: 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி
GTvSRH: 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி...
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?...
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!...