Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஊட்டி, கொடைக்கானல் விடுதிகளுக்கு கிடுக்கு பிடி.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

High Court Order on Ooty, Kodaikkanal Hotels | ஊட்டி மற்றும் கொடைக்காலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கும் விதமாக எராளமான தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஊட்டி, கொடைக்கானல் விடுதிகளுக்கு கிடுக்கு பிடி.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 25 Apr 2025 21:58 PM

சென்னை, ஏப்ரல் 25 : உதகை (Ooty) மற்றும் கொடைக்கானலில் (Kodaikkanal) உள்ள தங்கும் விடுதிகள் உரிய அனுமதி உடன் செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்ற (Chennai High Court) உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு நடத்தப்படும் ஆய்வில், உரிமம் இல்லை என்று தெரிய வந்தால், உரிமம் இல்லாத விடுதிகளை மூட வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், உதகை மற்றும் கொடைக்கானலில் இயங்கி வரும் விடுதிகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழக சுற்றுலா பயணிகளின் முதன்மை தேர்வாக உள்ள ஊட்டி மற்றும் கொடைக்கானல்

ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களாக விளங்குகின்றன. இயற்கை எழில் கொஞ்சும் அழகிய தோற்றம் கொண்ட இந்த இடங்களை காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். அதிலும் குறிப்பாக, கோடைக்காலங்களில் இந்த இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். காரணம், தமிழகத்தின் மற்ற எந்த பகுதிகளை விடவும் இந்த இரண்டு பகுதிகளும் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதன் காரணமாக கோடை வெப்பத்தை தனிக்கும் வகையில், சுற்றுலா பயணிகள் இங்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

விடுதிகளுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பொதுமக்கள் அங்கு சில நாட்கள் தங்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். இதன் காரணமாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த நிலையில், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது ஊட்டி கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் உரிய அனுமதியுடன் செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் மூவர் குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட வருவாய் அதிகாரி,  நகராட்சி ஆணையர், மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி உள்ளிட்டோர் இந்த குழுவில் அடங்குவர்.

இந்த ஆய்வின் போது உரிமம் இல்லாத விடுதலை மூட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், தங்கும் விடுதிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றனவா என்பது குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?...
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி...
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...