இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா? – எம்.பி. வெங்கடேசன் கேள்வி

Indian Railways essay contest: இந்திய ரயில்வே நடத்தும் கட்டுரைப் போட்டி, இந்தி மொழியில் மட்டுமே கட்டுரை அனுப்ப வேண்டும் என்கிற விதிமுறையால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் இதனைக் கண்டித்து, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். போட்டி விதிகளை மாற்றக் கோரியுள்ள அவர், இந்தி திணிப்பு நாட்டின் மொழிப் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா? – எம்.பி. வெங்கடேசன் கேள்வி

சு. வெங்கடேசன் கண்டனம்

Published: 

05 May 2025 15:49 PM

சென்னை மே 05: இந்திய ரயில்வே (Railway) நடத்தும் கட்டுரை போட்டியில் இந்தி மொழிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் (Madurai MP S. Venkatesan), “இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா?” என விமர்சித்துள்ளார். இந்தி திணிப்பு சீரழிவுக்கானது எனவும், போட்டி விதிகளை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்தி திணிப்பு விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போட்டியின் கடைசி தேதி 2025 ஜூலை 1 என்றும், பரிசுத் தொகைகள் ரூ.10,000 வரை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் கட்டாயம் எழுதவேண்டும் என்ற நிபந்தனை சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

இந்திய ரயில்வே – இந்தி திணிப்பு? சு. வெங்கடேசன் எம்.பி கண்டனம்

இந்திய ரயில்வே நிறுவனம் நடத்தவிருக்கும் பயண அனுபவ கட்டுரை போட்டியில், கட்டுரைகள் இந்தி மொழியில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைக்கு எதிராக மதுரை மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்டு விமர்சனம்

தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், சு.வெங்கடேசன், “இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா?” என கேள்வி எழுப்பி, “இந்தப் போட்டியின் நோக்கம் பயண அனுபவத்தை பகிர்வது அல்ல, இந்தியை திணிப்பதே” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், இந்த விதிகளை மாற்ற வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அரசின் மொழிக் கொள்கையை மீண்டும் சுட்டிக்காட்டும் விவகாரம்

இந்த போட்டியின் விதிமுறைகள் தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ஹேஷ்டேக் #HindiImposition தற்போது வைரலாகியுள்ளது. இந்தி திணிப்பு விவகாரம் தமிழகம் உள்ளிட்ட மொழிப்பல்வேறு மாநிலங்களில் நீண்ட நாட்களாகவே எதிர்ப்பு எதிரொலிகளை கிளப்பி வருகிறது. புதிய கல்விக் கொள்கை மூலமாகவும், மூன்றாவது மொழி எனப்படும் பெயரில் இந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வலுத்து வருகின்றன.

எக்ஸ் தளத்தில் பதிவிட்டு எம்.பி. வெங்கடேசன் கண்டனம்

 

 ரயில்வே அறிவித்த போட்டியின் விவரங்கள்

இந்திய ரயில்வே அறிவித்திருக்கும் போட்டி “ரயில் யாத்ரா விரிதந்த் புரஸ்கார் 2025” என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பயணிகள், 3,000 முதல் 3,500 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை இந்தியில் மட்டுமே எழுத வேண்டும்.

பரிசு தொகையும், கடைசி தேதியும்

போட்டிக்கான கடைசி தேதி: ஜூலை 1, 2025

பரிசுகள்:

முதல் பரிசு – ₹10,000

இரண்டாவது பரிசு – ₹8,000

மூன்றாவது பரிசு – ₹6,000

ஆறுதல் பரிசு – 5 பேருக்கு தலா ₹4,000

வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மொழி திணிப்பு வழியே செயல்படுகிறதா ரயில்வே?

பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே தற்சமயம் திட்டமிட்டு இந்தி திணிப்பை முன்னெடுக்கிறதா என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுகிறது. பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்வுகளிலும் மொழி பல்வகைபாட்டை மதிக்காமல் ஒரே மொழிக்கு முக்கியத்துவம் தருவது, அரசியல் நோக்கமுள்ள செயல் என விமர்சனங்கள் வலுத்து வருகின்றன. இந்த விவகாரத்தில், தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாகக் கூறி வந்தாலும், மத்திய அரசு அதன் செயல்பாடுகளை மாற்றத் தயங்குவது எதிர்ப்பை மேலும் தீவிரமாக்கி வருகிறது.