Mock Drill : சென்னையில் இரண்டாவது நாளாக நடைபெற்ற போர் ஒத்திகை!
Chennai War Mock Drills Held in Chennai | பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆபரேஷன் சிந்தூரை தொடங்கியுள்ள நிலையில், அது தொடர்பான போர் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சென்னை, மே 08 : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை (Pahalgam Terror Attack) தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், ஆப்ரேஷன் சிந்தூரை (Operation Sindoor) இந்தியா கையில் எடுத்துள்ளது. இதில், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பாகிஸ்தான் அரசு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல முக்கிய பகுதிகளில் நேற்று (மே 07, 2025) போர் ஒத்திகை நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இன்றும் (மே 08, 2025) சென்னையில் போர் ஒத்திகை நடைபெற்றது. இதில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு கற்பிக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்திய அரசு
ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இரண்டு பேர் உட்பட 26 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த கோடூர சம்பவம் உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியா கடும் கோபம் அடைந்தது. பஹல்காம் தாக்குதல் இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானை சேர்த தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், இந்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்த இந்திய அரசு – பதிலடி தாக்குதல்
பஹல்காம் தாக்குதலை கண்டித்து இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்துள்ளது. அதன்படி மே 06, 2025 அன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய அரசு தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் உள்ளிட்ட பயங்கரவாதிகள் பலர் கொடூரமா கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதில் அளிக்கும் வகையில், பாகிஸ்தானும் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இந்த விவகாரம் தீவிரம் அடைந்த நிலையில், இந்திய அரசு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி மே 07, 2025 அன்று சென்னை, டெல்லி உள்ளிட்ட சுமார் 244 இடங்களில் அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து இன்றும் (மே 08, 2025) சென்னையில் இரண்டு இடங்களில் போர் ஒத்திகை நடவடிக்கை மேகொள்ளப்பட்டுள்ளது. சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் ஒத்திகை நடைபெற்றுள்ளது. இதில் போர் காலத்தில் போதும், தாக்குதலின் போதும் எவ்வாறு தற்காத்து கொள்வது, அவசர சிகிச்சை உதவிகளை மேற்கொள்வது உள்ளிட்டவை கற்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.