Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கொளுத்தும் வெயில்.. அடுத்த 5 நாட்களுக்கு இப்படிதான்.. வானிலை மையம் சொல்வது என்ன?

Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என்றும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதிமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொளுத்தும் வெயில்.. அடுத்த 5 நாட்களுக்கு இப்படிதான்.. வானிலை மையம் சொல்வது என்ன?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 15 Apr 2025 13:22 PM

வானிலை நிலவரம், ஏப்ரல் 15: தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடைக்காலம் தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. வெப்பநிலை ஒரு பக்கம் அதிகரித்தாலும் மேகக்கூட்டங்கள் காரணமாக ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகி வருகிறது. நேற்று (ஏப்ரல் 14, 2025) ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 15, 2025) தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை அடுத்த 5 நாட்களுக்கு தொடரும். அதேபோல், அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்?


சென்னையில் இன்று (ஏப்ரல் 15,2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், நாளை (ஏப்ரல் 16, 2025) அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை கடந்த 2 நாட்களாக வெப்பநிலை சற்று குறைந்த காணப்பட்டாலும், காற்றில் அதிகப்படியான ஈரப்பதத்தின் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேகக்கூட்டங்கள் காரணமாக இரவு நேரங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?...
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!...
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?...
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்...
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?...
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!...
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!...
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!...
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!...
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?...
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!...