Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காலையிலேயே பரபரப்பு.. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்!

Chennai Anna University : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மர்ம நபர் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், அண்ணா பல்கலைக்கழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெடி குண்டு மிரட்டல் காரணமாக, அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

காலையிலேயே பரபரப்பு.. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்!
அண்ணா பல்கலைக்கழகம்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 Apr 2025 07:59 AM

சென்னை, ஏப்ரல் 18: சென்னை கிண்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு (Chennai Anna University) மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் (Bomb Threat) விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வரும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடி குண்டு மிரட்டலை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்

அண்மைக் காலங்களில்  மர்ம நபர்கள் வெடி குண்டு மிரட்டல் விடுப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. விமான நிலையம், பள்ளிகள், கல்லூரிகள்,  அரசு அலுவலகங்கள், முதல்வர்களுக்கு, ஆளுநர் மாளிகை உள்ளிட்ட இடங்களுக்கு மர்ம நபர்கள் வெடி குண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள முக்கிய இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் தொடர்ந்து வருகிறது.  போன் மூலமாகவும், இமெயில் மூலமாகவும் மர்ம நபர்கள் வெடி குண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இதனால், அவ்விடத்தில் சென்று சோதனை செய்து பார்த்தால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வருகின்றது. இதுபோன்ற போலி வெடி குண்டு மிரட்டலை  தடுக்க காவல்துறை  தீவிர நடவடிக்கை எடுத்த வருகிறது.

அதே நேரத்தில், வெடி குண்டு மிரட்டல் விடுக்கும் நபர்களையும் போலீசார் விசாரணை நடத்தி கைது செய்து வருகின்றனர். இந்த வெடி குண்டு மிரட்டலால் அவ்வப்போது பொதுமக்கள் பதற்றமும் அடைகின்றனர்.

போலீசார் தீவிர சோதனை

இந்த நிலையில், தற்போது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு  மர்ம நபர் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.  இமெயில் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு  மர்ம நபர் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். பல்கலைக்கழகம் முழுவதும் வெடி குண்டு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடி குண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.

மேலும், போலியான வெடி குண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அண்மையில் கூட, சென்னையில் உள்ள தனியார் பள்ளிக்கு மர்ம நபர் போன் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்தனர்.  இதனால் பள்ளிகளில் மாணவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். மேலும், மாணவர்கள் உடனே வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அப்பள்ளியில் சோதனை செய்ததில், வெடி குண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை - நயினார் நாகேந்திரன்
திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை - நயினார் நாகேந்திரன்...
குருபெயர்ச்சி 2025.. சென்னையில் செல்ல வேண்டிய குருபகவான் கோயில்!
குருபெயர்ச்சி 2025.. சென்னையில் செல்ல வேண்டிய குருபகவான் கோயில்!...
சிம்புவின் STR 49 படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்..?
சிம்புவின் STR 49 படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்..?...
நெட்ஃபிளிக்ஸில் மிஸ் செய்யக்கூடாத டாப் தென்னிந்திய படங்கள் இதோ
நெட்ஃபிளிக்ஸில் மிஸ் செய்யக்கூடாத டாப் தென்னிந்திய படங்கள் இதோ...
தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?
தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?...
3 ஆண்டுகளில் இந்திய யூடியூப் கிரியேட்டர்களுக்கு ரூ.21,000 கோடி!
3 ஆண்டுகளில் இந்திய யூடியூப் கிரியேட்டர்களுக்கு ரூ.21,000 கோடி!...
மே 6-ல் 7 மாவட்டங்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்!
மே 6-ல் 7 மாவட்டங்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்!...
மாமன் படம் குறித்து நெகிழ்ந்த நடிகர் சூரி - கவனம் பெறும் பதிவு!
மாமன் படம் குறித்து நெகிழ்ந்த நடிகர் சூரி - கவனம் பெறும் பதிவு!...
சினிமா பாணி சேஸிங்.. திருத்தணி கோயிலில் நடந்த பரபரப்பு கல்யாணம்!
சினிமா பாணி சேஸிங்.. திருத்தணி கோயிலில் நடந்த பரபரப்பு கல்யாணம்!...
தியேட்டரில் ரெட்ரோ படத்தை பார்த்த நடிகை பூஜா ஹெக்டே...
தியேட்டரில் ரெட்ரோ படத்தை பார்த்த நடிகை பூஜா ஹெக்டே......
ஆண்டுக்கு 8.1% வட்டி வழங்கும் சிறந்த சேமிப்பு திட்டங்கள்!
ஆண்டுக்கு 8.1% வட்டி வழங்கும் சிறந்த சேமிப்பு திட்டங்கள்!...