Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆண்டுக்கு 8.1% வட்டி வழங்கும் சிறந்த சேமிப்பு திட்டங்கள் – சிறப்பம்சங்கள் என்ன?

Best Small Savings Schemes : சிறிய சேமிப்பு திட்டங்கள் தற்போது ஆண்டுக்கு 8.1 சதவிகிதம் வரை அதிக வட்டி வழங்குகின்றன. பாதுகாப்பான முதலீடுகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் பிபிஎஃப், மூத்த குடிமகன் சேமிப்பு திட்டம், என்.எஸ்.சி போன்ற திட்டங்களில் முதலீடு செய்து அதிக வருமானத்துடன் வரிவிலக்கும் பெறலாம்.

ஆண்டுக்கு 8.1% வட்டி வழங்கும் சிறந்த சேமிப்பு திட்டங்கள் – சிறப்பம்சங்கள் என்ன?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 02 May 2025 15:10 PM

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஒருவருக்கு மாத வருமானம் மட்டும் போதுமானதாக இருக்காது. பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு (Investment) செய்து நிலையான வருமானம் பெற அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் பல முதலீட்டு திட்டங்களில் வட்டி குறைவு. அதே நேரம் ஆபத்தும் அதிகம். இந்த நிலையில் அரசு அங்கீகாரம் பெற்றுள்ள பல சிறிய சேமிப்பாளர்களுக்கு நல்ல வட்டி விகிதங்களை (Interest Rate) வழங்கி வருகின்றன. அதற்கு சிலவற்றில் வரிவிலக்கும் கிடைக்கிறது. மேலும் நம் முதலீடும் பாதுகாப்பானதாக இருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் உறுதியான வருமானம் தேவைப்படும்போது, வங்கித் திட்டங்களைவிட போஸ்ட் ஆபிஸ் (Post Office) உள்ளிட்ட சிறிய சேமிப்பு திட்டங்கள் சிறந்த மாற்றாக கருதப்படுகின்றன. தற்போது இந்த சிறிய சேமிப்பு திட்டங்கள் சில, ஆண்டுக்கு அதிகபட்சம் 8.1 சதவிகிதம் வரை வட்டி வழங்கி,  மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அதிக வட்டி வழங்கும் சேமிப்பு திட்டங்கள்

மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற இந்த சிறிய சேமிப்பு திட்டங்களில் பின்வரும் திட்டங்கள் தற்போதைய காலக்கட்டத்தில் அதிக வட்டி வழங்குகின்றன.

சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் (Senior Citizens Savings Scheme ) திட்டத்தில் ஆண்டுக்கு 8.2 சதவிகிதம் வட்டி கிடைக்கிறது. மேலும் சுகன்யா சம்ருத்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana) திட்டத்தில் ஆண்டுக்கு 8.2 சதவிகிதம் வரை வட்டி விகிதம் அளிக்கிறது. நேஷனல் சேவிங் ஸ்கீம் (National Savings Scheme) திட்டத்தில் 7.7 சதவிகிதம் வட்டி கிடைக்கிறது. பப்ளிக் புரோவிடெண்ட் ஃபண்ட் (Public Provident Fund) திட்டத்தில் ஆண்டுக்கு 7.1 சதவிகிதம் வட்டி அளிக்கிறது. மேலும் கிசான் விகாஸ் பட்ரா (Kisan Vikas Patra) திட்டத்தில் ஆண்டுக்கு 7.5 சதவிகிதம் வரை வட்டி வழங்குகிறது. நேஷனல் சேவிங்ஸ் டைம் டெபாசிட் (National savings Time Deposit) திட்டத்தில் ஆண்டுக்கு 7.5 சதவிகிதம் வட்டி வழங்குகிறது.

இதன் நன்மைகள்

இந்த வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு கணக்கிடப்படும் மற்றும் எவ்வளவு நாள் திட்டத்தில் இணைந்திருக்கிறோமோ அதற்கு ஏற்ப மாறுதல்கள் இருக்கும்.  அரசு ஆதரவு பெற்றுள்ளதால் இந்த திட்டங்கள் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மேலும் வருமான வரி சட்டம் 80c பிரிவின் கீழ் 1.5 லட்சம் வரை வரிவிலக்கு கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வட்டி தானாக நமது முதலீட்டுத் தொகையில் சேர்க்கப்படும். திட்டம் முடிந்த பிறகு முழு தொகையையும் வட்டியுடன் பெறலாம்.

இவை நிலையான வருமானமும், வரிவிலக்கும் வழங்கும் சிறிய சேமிப்பு திட்டங்கள், இன்று முதலீட்டாளர்களுக்கான நம்பகமான மற்றும் பயனுள்ள தேர்வாகவும் இருக்கின்றன. குறிப்பாக 8.1% வரை உயர்ந்த வட்டி கிடைக்கும் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது சிறந்தது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)

தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?...
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!...
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?...
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்...
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?...
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!...
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!...
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!...
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!...
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?...
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!...