திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
BJP Leader Nainar Nagendran Slams DMK Government | ஈரோட்டில் வயதான தம்பதி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். மேலும் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அவர் முதல்வரை வலியுறுத்தியுள்ளார்.

நயினார் நாகேந்திரன்
சென்னை, மே 2 : திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் (DMK – Dravida Munnetra Kazhagam) யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று பாரதிய கனதா கட்சி (BJP – Bharatiya Janata Paty) மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஈரோடு இரட்டை கொலை (Erode Double Murder) சம்பவம் தொட்ரபாக இன்று (மே 2, 2025) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நயினார் நாகேந்திரன், அதில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நெறிபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்
ஈரோட்டில் வயதான தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், ஈரோடு அருகே தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி கொலை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். திராவிட மாடல் ஆட்சியில் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மக்களுக்கு சட்டம் ஒழுங்கு மீதான நம்பிக்கையை முற்றிலுமாக சிதைந்துவிடும் அபாயம் உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.
முதலமைச்சரை வலியுறுத்திய நயினார் நாகேந்திரன்
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த ஒரு வயதான தம்பதியினர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள, செய்தியை அறிந்து கடும் அதிர்ச்சியுற்றேன்.
தமிழகத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை வழக்கிலேயே இன்னும் எவ்வித தடயத்தையும் @arivalayam அரசு கண்டுபிடிக்காத…
— Nainar Nagenthiran (@NainarBJP) May 2, 2025
அதனை தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட நயினார் நாகேந்திரன், தமிழகத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை வழக்கிலேயே இன்னும் எவ்வித தடயத்தையும் அரசு கண்டுபிடிக்காத நிலையில், கொங்கு பகுதியில் மீண்டும் அரங்கேறி வரும் இதுபோன்று கொடூர சம்பவங்கள் நம்மை அச்சத்தில் உறைய வைப்பதோடு திராவிட மாடல் அரசில் சிறு குழந்தைகள் முதல் வயதானவர் வரை எவருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற கசப்பான உண்மையை நமக்கு உணர்த்துகிறது என்று கூறியுள்ளார்.
எனவே தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை குற்றங்களால் பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கின் மீதான நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்து விடும் அபாயம் உள்ளதால் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து, கைது செய்து சட்டம் ஒழுங்கு சரிசெய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துவதாகவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.